பக்கம்:கற்சுவர்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 கற்சுவர்கள்

பேசிக்கிட்டும் இருக்காங்க. நீங்க நடந்தே வந்தீங்கன்னாச் சில ஆளுங்க முறை தெரியாமே மரியாதை இல்லாமே நடுவழியிலேயே உங்களை நிறுத்தி வச்சுத் துஷ்டி விசாரிப் பாங்க. அதைத் தவிர்க்கலாம்னு தான் காரைக் கொண் டாரச் சொன்னேன்' என்பதாகப் பெரிய கருப்பன் சேர்வை சொல்லி விளக்கிய பின்பு மாமாவுக்கும் அவரி சொன்ன யோசனை சரியென்றே தோன்றியது.

"ஏன் நடந்தே போகலாமே? அதிலே என்ன தப்பு?" என்று தனசேகரன் வேறு ஆரம்பித்தான்.

'இல்லே தம்பீ; அவர் சொல்றதுதான் மொறை. போறப்ப வர்ரப்ப நடுவழியிலே நிறுத்தித் துஷ்டி கேட் கிறது நல்லா இருக்காது. அதுக்கு நாமே எடங் கொடுத் திடக் கூடாது' என்று மாமா அடித்துச் சொன்னார்.

தனசேகரன், அதற்கப்புறம் நடந்து போவதை வற்புறுத்த வில்லை.

முன் nட்டில் காரியஸ்தரும். பின் nட்டில் மாமாவும், தனசேகரனும் அமர்ந்த பின் டிரைவர் ஆவுடையப்பன் காரை ஸ்டார்ட் பண்ணினான். கார் அடுத்த நிமிஷ:மே கூட்டம் கூடியிருந்த ராஜ ராஜேஸ்வரி விலாச ஹால் முகப்பில் போய் நின்றது. காரை சூழ்ந்துகொண்டு வந்து ஒரு பெருங் கூட்டம் மொய்த்தது. "சின்னராஜாவும் அவங்க ம்லேயா மாமாவும் வர்ராங்க" என்று பல குரல்கள் ஒரே சமயத்தில் முணுமுணுத்து ஒய்ந்தன. மகாராஜாவின் சடலத்தைச் சுற்றிலும் மொய்த்திருந்த முக்கியஸ்தர்களும், பிரமுகர்களும் விலகி வழி விட்டனர்.

ஜில்லா கலெக்டர், போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர். டிஸ்ட்ரிக் ஜட்ஜ் எல்லாரும் நன்றாக விடிந்த பின் ஏழு ஏழரை மணிக்கு வந்து துக்கம் விசாரித்தார்கள். 'இந்தச் சினிமா ஸ்டார்ஸுங்க கொஞ்சம் பேர் மெட்ராஸ்லேருந்து வந்திருக்காங்க. தயவு செய்து பிரேத ஊர்வலத்திலே அவங்க நட்ந்தோ காரிலோ பின்னால் வரவேண்டாம்னு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/46&oldid=553018" இலிருந்து மீள்விக்கப்பட்டது