பக்கம்:கற்சுவர்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

1960-க்கும் 75-க்கும் இடைப்பட்ட காலத்தில் சமஸ்தானங்களாக முன்பு இருந்த பழைமையான ஊர்கள். பழைமை :யான குடும்பங்கள் பிரதேசங்களைக் கவனித்தபோது, இந்தக் கதை என் மனதில் உருவாகத் தொடங்கியது. கற்சுவர்கள்' என்ற தலைப்பை விம்பாலிக்" ஆகக் க்ொடுத்திருக்கின்றேன். முதலில் இதை ஒரு சிறுகதையாக எழுதினேன். கதைக்கு நல்ல வரவேற்பு இருந்தது. - ராஜமான்யம், சமஸ்தான அந்தஸ்து, எல்லாம் பறி. போன பிறகு அரச குடும்பம்" -என்ற அர்த்தமில்லாதஆனால் வெறும் வழக்கமாகிப் போய்விட்ட ஒரு பழைய பெயரை வைத்துக் கொண்டு இப்படிக் குடும்பங்கள் .ெiறு.

கால வழுவாகச் (Anachronism) சிரமப்பட்டிருக்கின்றன

பழைய பணச் செழிப்பான காலத்தில் ஏற்படுத்திக் கொண்ட் பழக்க வழக்கங்களைப் புதிய பண நெருக்கடிக் காலத்தில் விடமுடியாமல் திணறிய சமஸ்தானங்கள். குதிரைப் பந்தயம், குடி, சூதாட்டம், பெண்கள் நட்புக் காகச் சொத்துக்களைப் படிப்படியாக விற்ற சமஸ்தானங் கள், கிடைத்த ராஜமான்யத் தொகையில் எஸ்டேட்டுகள் வாங்கியும், சினிமாப் படம் எடுத்தும், தொழில் நிறுவனங் கள் தொடங்கியும், ரேஸ் குதிரைகள் வளர்த்தும் புதிதாகப் பிழைக்கக் கற்றுக்கொண்ட கெட்டிக்காரச் சமஸ்தான ங் கள், என்று விதம் விதமான சமஸ்தானங்களையும் அவற்றை ஆண்ட் குடும்பங்களையும் பல_ ஆண்டுகளாகக் கூர்ந்து நோக்கியிருக்கிறேன். அழகான வேலைப்பாடுகள் செய்யப் பட்ட ஆனால் மூடி தொலைந்து போன ஒரு பழைய காலி, ஒயின் பாட்டிலைப் போல் இப்படிச் சமஸ்தானங்கள். இன்று எனக்குத் தோன்றின. காலி பாட்டிலுக்குப்பெருங்காய ட்ப்பாவுக்குப் பழம் பெருமைதான் மீத மிருக்கும். ஒவ்வொரு சமஸ்தான்த்திலும்_முன்பு சேர்த்து விட்ட பலதுறை- வேலை ஆட்களை இன்று கணக்குத் தீர்த்து அனுப்புகிறபோது எத்தனையோ மனவுணர்ச்சிப் பிரச்னைகள், ஸ்ெண்டிமெண்டுகள் எல்லாம் ஏற்பட்டிருக் கின்றன. ஊ தா ரி த் த ன ங் க ைள யு ம், ஊழல்மயம்ான செலவினங்களையும் விடவும் முடியாமல், வைத்துக் கொள்ளவும்- முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பு போல் தவித்திருக்கிறார்கள் சமஸ்தானமாக இருந்த குடும்பங் களைச் சேர்ந்தவர்கள். -

இந்த நாவலில் மேற்படி பிரச்னைகள் அனைத்தையும் இண்ைத்துக் கதாபத்திரங்கள் வருகிறார்கள். கதை நிக்ழ்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/5&oldid=1442454" இலிருந்து மீள்விக்கப்பட்டது