பக்கம்:கற்சுவர்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - šs

ஜீப் வசந்த மண்டபத்து விருந்தினர் மாளிகை வாயிலில் போய் நின்றதுமே தனசேகரனும் மாமாவும் உள்ளே போய் நீராடச் சென்றார்கள். 'எனக்குப் பச்சைத் தண்ணி ஒத்துக் காது. நாகூட வீட்டுக்குப் போயி வெந்நீரிலே தலைமுழு கிட்டு வந்துடறேங்க' என்றார் காரியஸ்தர்.

"எங்கே பார்த்தாலும் ஒரே ஜனநெரிசலா இருக்கு. ஜீப்பிலேயே போயிட்டு வந்திடுங்க” என்று மாமா காரியஸ் தரை ஜிப்பிதே போகக் சொல்வி வற்புறுத்தினார்.

இல்லீங்க. நான் நடந்தே போயிட்டு வந்து.றேன்" என்று மறுபடியும் தயங்கி காரியஸ்தரை, அது முடியிற காரியமில்லே. நான் சொல்றபடி கேளுங்க. ஜீப்பிலேயே போயிட்டு வாங்க' என்று கண்டித்துச் சொல்வி ஜீப்பில் அனுப்பி வைத்தார் தங்கபாண்டியன்.

அன்று மாலை ஐந்து ஐந்தரை மணிவரை தேவார மடத் தில் சாப்பாட்டு பந்திகள் ஓயவில்லை. அக்கம் பக்கத்துக் கிராம மக்கள் நிறைய வத்திருத்தார்கள். காரியஸ்தர் அவ் வளவு பேருக்கும் சாப்பாடு போட விரும்பவில்லை. அப்போது அந்த சமஸ்தானம் இருந்த போருளாதார வறட்சிநிலையில் அது கட்டாது என்ற பயம்தான் காரணம், *சாப்பாட்டிலே போய்க் கணக்குப் பார்க்க வேண்டாம்' என்று தங்கபாண்டியன் சொல்லியதால்தான் "தமக்கென்ன வந்தது' என்று சற்றே தாராளமாக விட்டிருந்தார் காரிய ஸ்தர். -

அன் பிற்பகலில் மாமா திங்கபாண்டியனும், தன சேகரனும் இரண்டு மூன்று மணி நேரம் அயர்ந்து தாங்கி னார்கள். மறுபடி அவர்கள் கண் விழித்தபோது ஆறுமணி. காபியருந்திவிட்டுக் காரியஸ்தரைக் கூப்பிட்டு அனுப்பினார் கள் அவர்கள்.

காரியஸ்தர் வரும்போது அவரோடு டைரக்டர் கோம வீஸ்வரனும் வரவே மாமாவுக்கும் தனசேகரனுக்கும் பொறுத்துக் கொள்ள முடியாத ஆத்திரமே மூண்டது.

க-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/55&oldid=553027" இலிருந்து மீள்விக்கப்பட்டது