பக்கம்:கற்சுவர்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 - கற்சுவர்கள்

"இந்தப் பயல் கோமளிஸ்வரன் ஏன் ஒட்டவச்ச வால் கணக்கா இன்னும் விடாமே சுத்திக்கிட்டிருக்கான்? இவன் ஏன் இன்னும் ஊருக்குத் திரும்பிப் போகலே இங்கே இவனுக்கு என்னா வச்சிருக்கு?’’

"அதுதான் எனக்கும் புரியமாட்டேங்குது மாமா?"

நல்ல் வேளையாக அப்போது காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வையே அவர்கள் மனநிலை புரிந்தோ என்னவோ கோமளிஸ்வரனை வாசலிலேயே நிறுத்தி வைத்துவிட்டுத் தான் மட்டும் தனியாக உள்ளே வந்தார்.

"உட்காருங்க மிஸ்டர் பெரியகருப்பன் சேர்வை! உங்ககிட்ட நானும் தம்பியும் கொஞ்சம் தனியாப் பேசறத் துக்காகத்தான் இப்போ கூப்பிட்டோம்.' -

பெரிய கருப்பன் சேர்வை எதிரே இருந்த நாற்காலியில் உட்கார்ந்தார், மாமா தங்கபாண்டியனும், தனசேகர னும் என்ன சொல்லப் போகிறார்களோ என்று அவர்கள் இருவர் முகத்தையுமே மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந் தார் அவர். முதலில் தனசேகரன்தான் பேசினான்:

'சமஸ்தானச் சொத்துக்கள்- கடன்கள் எல்லாத் துக்கும் கம்ப்ளிட்டா அஸெட்ஸ் அண்ட் லயபிலிட்டீஸ் ஒண்ணு தயார்ப் பண்ணியாகணும். அரண்மனை அந்தப் புரத்திலே இளையராணிங்கன்னும் அவங்களோட வம்சா வளின்னும் அடைஞ்சுகிடக்கிறாங்களே அதுக்கும் ஒரு லிஸ்ட் வேணும். இப்போ அரண்மனையிலே ஆற செலவு அயிட்டங் களைப் பத்தியும் உத்தியோகம் பார்க்கிறவங்களைப் பத்தி யும் கூட விவரம் வேணும்'. தனசேகரன் இப்படிச் சொல்லி யதும் பெரிய கருப்பன் சேர்வை, -

'ரெண்டு நாள் டயம் குடுங்க, எல்லாம் விவரமாத் தயார்ப் பண்ணித் தந்துடறேன். அதோட இன்னொரு விஷயம். இளையராணிங்க லிஸ்டிலே மெட்ராஸ்ல இருந்து வந்திருக்காங்களே அந்த சினிமா நட்சத்திரம் ஜெய நளினி யைக் கூடச் சேர்த்துக்கணும் போலிருக்கே?'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/56&oldid=553028" இலிருந்து மீள்விக்கப்பட்டது