பக்கம்:கற்சுவர்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 57

லாம் வெறுங்கையோட அனுப்பறது. உங்களுக்கு நல்லா இருந்தாச் சரிதான்' என்று கோமளிஸ்வரன் ஏதோ பணத்துக்கு அடி போட்டான். ஆனால் அதற்குள் ஜெய நளினி அங்கிருந்து வெளியேறிச் சிறிது தொலைவு போய் விட்டாள். மாமாவுக்கு வந்த கோபத்தில் என்ன செய்து விடுவாரோ என்று பயத்தான் தனசேகரன்.

ஏம்பா, நீயெல்லாம் மனுஷன்தானா? செத்துப் போனவருக்குத் தரகு கேட்டுக்கிட்டு இப்போ வந்து நிக்கிறியே! நீ செஞ்சிருக்கிற மானக் கேடான காரியங் களாலே இந்தச் சமஸ்தானமே சீரழிஞ்சு போயிருக்கு. இன்னும் உனக்குத் திமிர் அடங்கலியே?’’

விநாடிக்கு விநாடி மாமாவின் குரலில் சூடேறுவதைக் கேட்டுக் கோமளிஸ்வரன் மெதுவாக அந்த இடத்திலிருந்து நழுவி நடிகை ஜெய நளினியைப் பின் தொடர்ந்து சென் றான். - -

4.

தனசேகரனையும் அரண்மனைக் காரியஸ் தரையும் மிரட்டி ஏதாவது பணம் பறித்துக் கொண்டு போகலாம் என்று எண்ணிய சினிமா டைரக்டர் கோமளிஸ்வரன் விவகாரஸ்தரும், கறாரானவரும் ஆகிய தனசேகர னின் தாய் மாமன் தங்கபாண்டியன் உடனிருந்த காரணத்தால் பயந்து ஒடுங்கிப் பேசாமல் சென்னைக்குத் திரும்ப வேண்டி யதாயிற்று. - - -

பீமநாதபுரம் அரண்மனை எல்லைக்குள்ளிருந்த ஒரு பெரிய விருந்தினர் விடுதியை முற்றிலும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த நட்சத்திரக் கும்பல் வெளியேறி ஊர் திரும்பியதுமே, அரண்மனையில் வெளியிலிருந்து வேடிக்கை பார்க்க வரும் அநாவசியமான கூட்டம் குறைந்து விட்டது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/59&oldid=553031" இலிருந்து மீள்விக்கப்பட்டது