பக்கம்:கற்சுவர்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 3 கற்சுவர்கள்

குடுக்கிறப்போ இப்படி எடுத்துக்கிட்டுக் கொடுத்ததிலே பல வாத்தியாருங்களுக்கு ஒரே கோபம். 'எதுக்காக இந்தம் பிடித்தம்னு சில பேர் ஸ்கூல் ரைட்டரிட்டவே கோபமாக் கேட்டிருக்காங்க. ஏதோ ஸ்கூல் வெல்பேர் ஃபண்டு அது இதுன்னு ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விதமாப் பதில் சொல்லிச் சமாளிச்சிருக்காரு ரைட்டர்.'

"ஒண்ணும் கேக்கறதுக்கே நல்லா இல்லையே சேர்வை காரரே! படிப்புச் சொல்விக்கொடுக்கிற வாத்தியாருங்க வாயிலே மண்ணைப் போட்டுப் பணம் தண்டினா நல்லாவா இருக்கு? மகாராஜாவுக்கு ஏன்தான் இப்படிப் புத்தி கெட்டுப் போச்சோ? ரொம்ப அசிங்கமாவில்லே நடந்: திருக்கு?' என்று மாமா தங்கபாண்டியன் துயரம் தோய்ந்த குரலில் பதில் சொன்னார். -

"பீமநாதபுரம் அரண்மனையிலே பணத்துக்குத் தட்டுப் பாடு வரலாம் ஆனால் பெருந்தன்மைக்கும் தாராள மனப் பான்மைக்கும் தட்டுப்பாடு வரக்கூடாது. நீங்க சொல்றி. தெல்லாம் கேக்கறப்போ ரொம்பத் தலைகுனிவா இருக்குது சேர்வைகாரரே!' என்றான் தனசேகரன். - * . .

"அடுத்த மாசம் ஸ்கூல்லே, காலேஜ்லே சம்பளம் போடறப்போ அவங்கவங்க எந்தெந்தத் தொகைக்குக் கை யெழுத்துப் போடறாங்களோ அந்தந்தத் தொகையிலே ஒரு தம்பிடி கூடக் குறையாமே ஒழுங்காகக் கொடுத்துடனும்னு ரைட்டரிட்டச் சொல்லிடுங்க. அது மட்டுமல்ல. ஏற் கெனவே பிடிச்சிருக்கிற தொகையைக் கூடப் படிப்படியாக திருப்பிக் கொடுத்துடனும்னு சின்னராஜா உத்தரவு போட்டிருக்காருன்னும் ஒரலா. அவங்ககிட்டச் சொல் விடச் சொல்லுங்க' என்றார் மாமா. அப்போது தனசேகரன் குறுக்கிட்டு. மாமா! நீங்க சொன்னதெல் லாம் சரிதான். ஆனால் இந்தச் சின்னராஜா உத்தரவு' கட்டளை இது மாதிரி வார்த்தைங்களைக் கேட்டாலே எனக்குப் பத்திக்கிட்டு வருது. சும்மர "தனசேகரன் சொல்லுறான்னு சொல்லுங்களேன் போதும், எதுக்கு இந்த அரண்மனை ஜம்பமெல்லாம்? இந்த ஜம்பங்களிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/64&oldid=553036" இலிருந்து மீள்விக்கப்பட்டது