பக்கம்:கற்சுவர்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 6 3

யும், ஜபர்தஸ்துக்களிலேயும் அப்பா ஒருத்தர் சீரழிஞ்சது: போதாதா? என் பெயரையும் ஏன் கெடுக்க lங்க?"

தனசேகரனின் இந்தக் கோபமும் கழிவிரக்கமும் நியாய மானவை என்றே மாமாவுக்குத் தோன்றின. ஆனாலும் 'அட சும்மா இரு தம்பீ! உனக்கு "சின்னராஜா அது இதுன்னு மரியாதை குடுத்துக் கூப்பிடறது எல்லாம் பிடிக்க லேன்னாலும் மத்தவங்க உன்னை அப்படிக் கூப்பிட றதையோ பேசறதையோ நீளப்பிடி வேண்டாம்னு சொல்ல முடியும்? அதெல்லாம் வழக்கத்தை அத்தினி சுலபமா நீ. மாத்திப்பிட முடியாது' என்று அவனுடைய அதி தீவிர வேகத்தைக் கட்டுப்படுத்தினார் அவர்.

அன்றிரவு காரியஸ்தரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு மாமா தங்கபாண்டியனும் தனசேகரனும் விளக்கை அணைத்துப் படுக்கச் சென்றபோது இரவு இரண்டு மணிக்கு மேல் ஆகிவிட்டது காரியஸ்தர் சென்றபின் மாமா தனிமையில் தனசேகரனுக்குப் பல அறிவுரைகளையும் எச்சரிக்கைகளையும் செய்தார். |

'சமஸ்தானங்களுக்கு இனிமே இந்த நாட்டிலே மதிப்பு இல்லை. அதை ஆண்டவங்களோட பழம் பெருமை எல்லாம் பெருங்காயம் வச்சிருந்த டப்பா மாதிரி ஆகிப் போச்சுங்கிறதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் நீ இவ்வளவு வெளிப்படையாகவும் எளிமையாகவும் உன் மனசிலே நினைக்கிறதை எல்லாம் வாய்விட்டு திறந்து வைக்கிறாப்போலப் பேசிடப்படாது தம்பி! சில நல்ல காரியங்களைச் செய்யறத்துக்குக்கூட கொஞ்சம் ரிஸர்வேஷ . னும் அடக்கமும் வேண்டியிருக்கும்! பெரிய கருப்பன் சேர்வை ஒண்ணும் கெட்ட மனுஷன் இல்ல்ே, அதனாலே அவரை வச்சுக் கிட்டு எதுவும் பேசலாம்; ஆனால் பொது விலே நீ அப்பிடிப் பேசிடப்படாது."

'நீங்க சொல் lங்க மாமா! ஆனா இங்கே உள்ள பல

நிலைமைகளை மாத்தறதோ திருத்தறதோ ரொம்பக் கஷ்டம்னு தெளிவாத் தெரிஞ்சிக்கிட்டதாலேதான் அப்பா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/65&oldid=553037" இலிருந்து மீள்விக்கப்பட்டது