பக்கம்:கற்சுவர்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கற்சுவரிகள்

இன்னும் நிறையச் சீரழிச்சிருப்பாரு. நல்ல வேளையா இப்பப் போய்ச் சேர்ந்தாரு.' - -

'தம்பீ! உன் கோபம் எனக்குத் தெரியுது. ஆனா இனிமே இப்பிடி வேற யாரிட்டவும் மறந்து போய்க்கூடச் சொல்லிடாதே. எங்கிட்டச் சொன்னதிலே தப்பு இல்லே . ஆனா வேற எவனாவது வெளிமனுஷன் கேட்டான்னா, "அப்பா போனது நல்லது. இன்னும் கொஞ்ச நாள் இருந்தாருன்னா அரண்மனைச் சொத்தை நிறையச் சீரழிச்சுக் கெடுத்திருப்பாரு'ன்னு தனசேகரனே சொல்றா ருன்னு வெளியிலே கண்டமானைக்கித் துஷ்பிரச்சாரம் பண்ணிடுவாங்க...”*

"இப்ப நீங்க சொல்றது சரிதான் மாமா! இங்கே இந்த அர்த்த ராத்திரியிலே வேற யாரு இருக்காங்க? நீங்களும் தானும்தானே தனியாப் பேசிக்கிட்டிருக்கோம்; அதான் மனசிலே பட்டதைச் சொன்னேன்.

"ஏன் தம்பீ? இன்னொரு விஷயம் மறந்தே போச்ச்ே; இங்கே அரண்மனைக்குள்ளே பீமவிலாசம் பிரிண்டிங் பிரஸ்’னு ஒரு பிரஸ் இருந்திச்சே? அது என்னாச்சு?’’

"இருக்கு மாமா! ஆனா பிரஸ் ஓடலைன்னு நினைக்கி றேன். சும்மா இழுத்துப்பூட்டி அடைச்சுப் போட்டிருக் காங்க போல்ருக்கு?" - "ரொம்ப நாளைக்கு முன்னாடி அந்தப் பிரஸ்லேருத்து பெரும் புலவர் பீமநகர், நாகநாதனார்னு ஒருத்தரு ராஜ குல திலகம்’னு அரண்மனை கெஸ்ட்' மாதிரி ஒரு பத்திரிகை வேற நடத்திக்கிட்டிருந்தாரில்லே?" - -

ஆமாம்! ராஜமான்யம் நின்னுபோனதும் அப்பாவே அதை நிறுத்திப்பிட்டாரு. ராஜமான்யம் வந்தவரை செலவுக் கணக்கு எழுத அதெல்லாம் வேண்டியிருந்துச்சு, *ராஜகுல திலகம் என்கிற பத்திரிகைப் பெயரை விட கெளரவ ஆசிரியர், ஹிஸ் ஹைனெஸ் பீமநாத ராஜசேகர பூபதி மகாராஜா என்கிற பேர்தான் பெரிய எழுத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/68&oldid=553040" இலிருந்து மீள்விக்கப்பட்டது