பக்கம்:கற்சுவர்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 67

களிலே அச்சிடப்பட்டிருக்கும். அதுக்குக் கீழே சிறப் பாசிரியர் பெரும்புலவர் பீமநகர் நாகநாதனார்னு போட் டிருக்கும். அந்தப் பத்திரிகைப் போட்ட முப்பத்திரண்டு பக்கத்திலே முப்பத்தொரு பக்கம் வரை அப்பாவோட வீர தீரப் பிரதாயங்கள்தான் இருக்கும். அவருடைய வெளி யூர்ப்பிரயாணங்கள், திரும்பி வந்த தேதி, அரண்மனைக்கு வந்துபோகும் முக்கியஸ்தர்களோடு நின்று அப்பா எடுத்துக் கொண்ட போட்டோ எல்லாம் அதில் வரும்.'

'சரி தம்பி! நீ அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்ப்பா. இப்போ அந்தப் பிரஸ் ரன்னிங் கன்டிஷன்லே இருக்கா, இல்லியான்னு மட்டும் காரியஸ் தரை நாளைக்கே விசாரிக் கணும். ரன்னிங் கன்டிஷன்லே இருந்தா ஊர்லே 'ஜாப் ஒர்க்ஸ் எடுத்து நாமே நல்ல ஆளுங்களா போட்டு அதைத் தொடர்ந்து நடத்தலாம். "ரன்னிங் கண்டிஷன்லே இல்லேன்னா நல்ல பார்ட்டி"யாய் பார்த்து உடனே விலை பேசி வித்துப்பிடலாம்.' -

-- "ஊரிலேயிருந்து ரொம்பத் தள்ளியிருக்கிற இந்த இடத்துக்குள்ளே இவ்வளவு பெரிய தோட்டத்தைக் கடந்து அரண்மனைக்குத் தேடிவந்து பிரஸ்ஸுக்குக் கஸ்டமர்ஸை எதிர்பார்க்க முடியாது மாமா. அப்படி நாம பிரஸ்லைத் தொடர்ந்து நடத்தறதா இருந்தா டவுனுக்குள்ளே ஷிப்ட் பண்ணிடனும். இல்லாட்டிக் கஷ்டம் மாமா.

  • முதல்லே பிரஸ் இருக்கான்னு தெரிஞ்சுக்கப்பா: அப்புறம் மத்ததை யோசனை பண்ணுவோம்’ என்றார் 一基主}f*蔷J”。 -

முதல் நான் இரவு தாமதமாகத் தூங்கச் சென்றதால் மறு நாள் காலை மாமாவும் தனசேகரனும் எழுந்திருப் பதற்கே விடிந்து எட்டரை மணிக்கு மேலாகிவிட்டது. ஏழு மணிக்கே காரியஸ்தர் பெரியகருப்பன் சேர்வை வந்துவிட் டார். அவர்கள் இருவரும் துரங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து எழுந்திருக்கிற வரை வேறு காரியத்தைக் கவனிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/69&oldid=553041" இலிருந்து மீள்விக்கப்பட்டது