பக்கம்:கற்சுவர்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 69

லைன் பண்ணின பேப்பர் காப்பீஸ்லாம் அரண்மனை ஆபீஸ் ஃபைல்லே வச்சிருப்பிங்களே? அதையெல்லாம் தேடி எடுங்க. அப்புறம் மேலே என்ன செய்யறதுன்னு முடிவு பண்ணுவோம்.'" ... 2 -

மாமா தங்கபாண்டியன் இவ்வாறு கூறியதுமே அந்த விருந்தினர் விடுதியிலிருந்த டெலிஃபோனிலேயே அரண் மனை அலுவலகத்தோடு தொடர்புகொண்டு பிரஸ் சம்பந்த மான ஃபைல்களைத் தேடி எடுக்குமாறு அங்குள்ளவர் களைக் கேட்டுக் கொண்டார் காரியஸ்தர். -

- உடனே அப்போதுதான் ஞாபகம் வந்தவரைப் போல் மாமா டெலிபோன்களைப் பற்றி விசாரித்தார். "சமஸ் தானச் செலவிலே மொத்தம் எத்தனை டெலிபோன் இருக்கு? எத்தனை எக்ஸ்டென்ஷன்ஸ் இருக்கு? அதிலே எத்ெது கண்டிப்பாக இருந்தாகணும்; ஏதெதை உடனே ரிமூவ் பண்ணச் சொல் விட லாங் கி ற அளவுக்கு அநாவசியம்?" . . . . .

கணக்கு எடுத்து இன்னிக்குச் சாயங்காலத்துக் குள்ளார உங்க கிட்ட ஒரு விஸ்ட் போட்டுத் தந்துடறேன். எது அவசியம் இருக்கணும். ஏதெதை உடனே எடுத்துட லாம்கிறதை நீங்களும் சின்ன ராஜாவுமா முடிவு பண்ணிச் சொல்லிடுங்க" என்றார் பெரிய கருப்பன் சேர்வை.

"சமஸ்தானத்துக் கோவில்கள் நிலைமை என்ன? பசு மடம் எங்கெங்கே இருக்கு? தேவாரப் பாடசாலை. வேத பாடசாலை எல்லாம் எப்படி எப்படி இருக்கு' இந்த நாளிலே அதுக்கெல்லாம் படிக்கிறதுக்குப் பையன்கள் தேடி

வராங்களா இல்லியா...?”

"அரசநாத மங்கலம் வேதபாடசாலையியே நாலே நாலு பையன்கள் மட்டும் படிக்கிறாங்க. குணவேதி நாடு சிவ லாயத்தை ஒட்டி இருக்கிற தேவாரப் பாடசாலையிலே பன்னிரண்டு பிள்ளைகள் இருக்காங்க. அங்கே மூணு

க-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/71&oldid=553043" இலிருந்து மீள்விக்கப்பட்டது