பக்கம்:கற்சுவர்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்சுவர்கள் . 70י

ஒதுவார் மூர்த்திகள் தேவாரம் சொல்லிக் கொடுக்கிறாங்க. வேத பாடசாலை, தேவார பாடசாலை எல்லாத்தில்ேயும் பையன்களுக்குச் சாப்பாடு போட்டு மாதம் எட்டு ரூபாய் "ஸ்டைபண்ட் வேறே கொடுத்திட்டிருந்தோம். ராஜ மான்யம் நின்ன வருஷமே பெரிய மகாராஜா என்னைக் கப்பிட்டு, இனிமே ஸ்டைபண்ட் கிடையாதுன்னு ஸ்ர்குலர் அனுப்பிடுங்க, சாப்பாடு மட்டும் போதும்" லுட்டாரு. ’’

"பாடசாலைச் செலவு. கோவில்களோட வருமானத் திலே இருந்து செய்யறிங்களா... அல்லது சமஸ்தானத்திலே வேற வருமானத்திலே இருந்து செய்யறிங்களா?" - -

"அந்த எக்ஸ்பெண்டிச்சர் எல்லாமே டெம்பிள்ஸ் அண்ட் சாரிட்டீஸ்'ங்கிற ஹெட்லே தான் வரும். கோவில் வருமானங்களுக்குச் செலவு கணக்குக் காட்ட இப்படி ஏதாச்சும் ரெண்டு மூணு இருக்கட்டும்னுதான் மகாராஜா இதெல்லாம் மூடாமே விட்டுவச்சிருந்தாரு. எங்கிட்டவே ஒருவாட்டி அதை அவரே வாய்விட்டுச் சொல்லக்கூடச் சொல்லியிருந்தாரு என்றார் பெரிய க ரு ப் ன் சேர்வை, . . . . . . . . .

அப்போது தனசேகரன் குறுக்கிட்டுக் கேட்டான். 'நாலு பையன்களுக்கும் ஐந்தாறு பையன்களுக்கும்ா இவ்வளவு செலவழிச்சுப் பாடசாலைங்க எதுக்கு?"

ஒரேயடியா அப்படிச் சொல்லிடப்படாது தம்பி. கல்சர். ரெலிஜன், டிரடிஷன் இதை எல்லாம் நாலு பேரா. அஞ்சு பேரான்னு எண்ணிக்கையை வீச்சுப் பார்க்கக் கூடாது. எந்த எண்ணிக்கைக்கு குறைவாயிருந்தாலும் 'அந்த எண்ணிக்கையிலேயே வச்சு "அப்ஸ்ர்வ் பண்ணனும். அதுத்ான் முறை" என்று மாமா தனசேகரனுடைய அபிப்பிராயத்துக்குத் திருத்தம் கூறினார். அதில் மாமா tலுக்கு இருந்த பிடிவாதத்தைப் பார்த்துத் தனசேகரனே ஆச்சரியப்பட்டுப் போனான். - - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/72&oldid=553044" இலிருந்து மீள்விக்கப்பட்டது