பக்கம்:கற்சுவர்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 71

மாமாவிட்ம் பல நேர்மாறான குணங்கள் இணைத் திருந்தன. சிக்கன உணர்வும் இருந்தது. தாராள மனப்

பான்மையும் இருந்தது. எதில் சிக்கனமாக இருக்கவேண்டும்

எதில் சிக்கனமாக இருக்கக் கூடாது. எதில் தாராளமாக இருக்கவேண்டும், எதில் தாராளமாக இருக்கக்கூடாது என் பதில் எல்லாம் ஒரு தெளிவான தாரதம்மியமும், அபிப் பிராயமும் அவருக்கு இருந்தன. தனசேகரனுக்கு மாமா அருகில் இருந்தது பல பிரசினைகளில் வழவழா என்று இழு படாமல் முடிவு செய்யப் பெரிதும் உதவியாக இருந்தது.

அந்த அரண்மனை அதன் வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கள், வருமானங்கள், செலவுகள், சொத்துக்கள், பிரச்னை, கள் எல்லாவற்றையும் பற்றி அதன் ஒரே வாரிசாகிய தன.

சேகரனுக்குத் தெரிந்திருந்த விவரங்களைவிடத் தாய் மாம

னாகிய தங்கபாண்டியனுக்கு அதிகம் தெரிந்திருந்தது.

அன்று பகல் சாப்பாடு முடிந்ததும் காரியஸ் தரையும் தனசேகரனையும் உடனழைத்துக் கொண்டு மகாராஜாவின் இளையராணிமார்கள் அடைந்து கிடந்த அந்தப்புரப் பகுதிக்குள் சென்றார் மாமா தங்கபாண்டியன். .

"சேர்வைகாரரே! எதுக்கும் நாம இந்தப் பொம்பளைக் களோட அறைக்குள்ளாரப் போக வேண்டாம். முன் ஹால் லேயே ஒரு பெரிய ஜமுக்காளத்தை கொண்டாந்து விரிச்சு அவங்களை எல்லாம் வந்து உட்காரச் சொல்லுங்க. அவங்க யோசனையை அவங்க சொல்லட்டும். நம்ம யோசனையை நாம சொல்லுவோம். வீண் சண்டை சச்சரவுக வந்து ஒருத் தருக்கொருத்தர் வார்த்தை தடிக்காமல் பார்த்துக்கணுக் கிறதுதான் இதிலே முக்கியம்' என்று அந்தப்புரத்திற்குள் துழைகிற போதே சேர்வைகாரரிடம் எச்சரிக்கையாகச் சொல்லி வைத்தார் மாமா. ~ -

எந்த இடத்தில் நடந்து போய்க் கொண்டிருந்த போது மாமா இப்படிச் சொல்லியிருந்தாரோ அந்த இடத்திலேயே காரிஸ்தர் பெரியகருப்பன் சேர்வை உடனே தயங்கி நின்றார். பின்பு ஆக்கம்பக்கம் பார்த்துவிட்டுக் குரலைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/73&oldid=553045" இலிருந்து மீள்விக்கப்பட்டது