பக்கம்:கற்சுவர்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 கற்சுவர்கள்

தனித்துக்கொண்டு "இவங்களிலே முக்கால் வாசிப்பேர் மகாராஜாவுக்குப் பொட்டுக்கட்டிக் கிட்டவங்கதான். மத்து. ரெண்டொருத்தருக்குத்தான் அக்கம்பக்கத்து ஊர்வியும் உள்ளுர்லியும் உறவுக்காரங்க இருக்காங்க. பொட்டுக் கட்டிக்கிட்டவங்களைப் பொறுத்து ஒரு பிரச்னையும் இருக் காதுங்க, மத்தவங்கத்ான் நீங்க என்ன பேசி முடிவு பண்ண னும்னாலும் உறவுக்காரங்களையும் கூட வச்சுக்கிட்டுத் தான் அதெல்லாம் பேசி முடிவு பண்ணனும்னு முரண்டு. பிடிப்பாங்க. அந்த ரெண்டொருத்தருகிட்டப் பேசி முடிவு. பண்றதுதான் ரொம்பச் சிரமப்படும். மத்ததெல்லாம் சுலபமா முடிஞ்ச் போயிடும். வீடு கட்டிக்கிறத்துக்கு ஒரு எடமும் கையிலே கொஞ்சம் ரொக்கமும் கொடுக்கற. தாயிருந்தா இவங்களிலே பலர் திருப்தியா இங்கேருந்து வெளியேறிடுவாங்க." -

- "சரி, கூப்பிடுங்க பார்க்கலாம்! அவங்ககிட்டவே பேச லாமே? இதுலெ ஒளிவு மறைவு என்ன வேண்டிக். கிடக்கு?’ என்றார் மாமா. ஆனால் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வையே அந்தப்புரத்திற்கு உள்ள்ே போகத், தயங்கினார். . . -

முன்னாலே பெரிய ராஜா இருக்கிறப்பவே நான் இந்த இடத்து வரைகூட அவரோடவே ஏதாவது பேசிக். கிட்டுத்தான் வந்திருக்கிறேனே ஒழியத் தனியா வந்தது. இல்லே. х . < . " .

அதுனாலே என்ன? வேலைக்காரிங்க யாராச்சும். இருந்தாங்கன்னாக் கூப்பிடுங்களேன். அவங்ககிட்ட ஒரு. வார்த்தை சொல்லி அனுப்பலாம்.' . .

பீமநாதபுரம் அரண்மனையின் ஆந்தப்புரம் அந்த வேளையில் கண்ணுக்கெட்டிய தூரம் ஆளரவமற்று. வெறிச்சோடிக் கிடந்தது. ஒரு பெரிய பனைமரத்தைக் கொண்டு வந்து அப்படியே உள்ளே நிறுத்தினால் கூடத் தாங்கும்போல அவ்வளவு உயரமான அந்தக் கட்டிடத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/74&oldid=553046" இலிருந்து மீள்விக்கப்பட்டது