பக்கம்:கற்சுவர்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 73

ஆதாகாரமான காரைத் தூண்கள் தனித்தனியே நின்று கொண்டிருந்தன. ம்ேல் விதான்த்தில் சில இடங்களில்ே வ்ெளவால்கள் சிரசர்சனம் செய்து கொண்டிருந்தன். வெள்ளையடிக்கவோ, காவி பூசவோ, வர்ணம் பூசவேர். காரை உப்புப் படிந்த இடங்களைச் செப்பனிடவோ வசதி இல்லாததால் கட்டிடத்தின் பழைமையும் பழுதுபட்ட நிலைமையும் முதற் பார்வையிலேயே விட்டுத் தெரியும்படி: தான் இருந்தன. வெளவால் புழுக்கை நாற்றம் வேண்டிய மட்டும் இருந்தது. காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வை அந்தப்புரம் இருந்த பக்கமாக இன்னும் சில கெஜ தூரம் துணிந்து முன்னேறி நடந்து சென்று, 'யாரங்கே...?' என்று குரல் கொடுத்தபடி இரு கைகளையும் இணைத்து நன்றாக ஆசை எழும்படி' பலமாகத் தட்டினார். இரண்டு மூன்று முறை அப்படிக்கை தட்டிக் கூப்பிட்ட பின் தலை, பாதி நீரையும் பாதி கருமையுமாக இருந்த ஒரு வேலைக்காரி மெல்ல எட்டிப் பார்த்தாள். அவளை ஜாடை செய்து அருகே கூப்பிட்டார் பெரிய கருப்பன் சேர்வை. அவள் அருகே வந்தாள். காரியஸ்தர் ஏதோ சொல்வதற்கு முயன் றார். அந்த வேலைக்காரி டமாரச் செவிடு என்பது புரிந்தது. குரவை மேலும் பெரிதாக்கிக் கொண்டு சொல்லிப் பார்த்தார் சேர்வைகாரர். அவர் என்ன சொல் கிறார் என்பதை அந்தக் கிழவி புரிந்து கொள்ளவில்லை. பெரிய கருப்பன் சேர்வை தொண்டைத் தண்ணிர் வற்றியது தான் மீதம். -

'சும்மா நீங்களே உள்ளே போய்ச் சொல்லுங்க..... இதென்ன அல்லி ராஜ்யமா? ஆம்பளைங்க நுழையக்கூடா துங்கிறதுக்கு: இந்த வேலைக்காரக் கிழவியோட நீங்களே உள்ளாரப் போங்க சொல்றேன்' என்றார் மாமா.

"'உங்களுக்குப் போறத்துக்குத் தயக்கமா இருந்தா நானும் வேணும்னாக்கூட வரேன், சேர்வைகார்ரே...' என்று சேர்ந்து கொண்ட தனசேகரனை, “虚 ப்ோக வேண் டாம் தம்பி...நீ உள்ளே போயிட்டேன்னா சின்னராஜா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/75&oldid=553047" இலிருந்து மீள்விக்கப்பட்டது