பக்கம்:கற்சுவர்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?盘 கற்சுவர்கள்

வந்தாச்சு. இங்கேயே விஷயத்தைப் பேசிடலாமேன்னு: அங்கே வச்சே அவங்க பிரச்னையை எல்லாம் ஆரம்பிச் சாலும் ஆரம்பிச்சிடுவாங்க' என்று மாமா குறுக்கிட்டுத், தனசேகரனைத் தடுத்தார். - -

"அவரு சொல்றதுதான் சரி. நீங்க வரவேண்டாம். நானே போயிட்டு வாரேன்' என்று காரியஸ்தரும் மாமா கூறியதை ஆமோதித்தார். வந்த வேலைக்காரியையும் உடனழைத்துக் கொண்டு அரண்மனைக்குள் முன்னேறி னார் அவர். மாமாவும் தனசேகரனும் முன் கூடத்திலேயே: நின்று கொண்டார்கள். . .

'சேர்வைக்காரர் வக்கீலுக்குப் படிச்சிருக்காரே தவிர வெட்டு ஒண்னு துண்டு ரெண்டா நடந்துக்க மாட்டேங் கறாரே? ரொம்பத்தான் தாட்சண்யப்பட்டுக்கிறாரு. நிர்வாகத்திலே இருக்கிறவங்க இவ்வளவு தூரம் தாட்சண் யப்பட்டா எந்த நல்ல மாறுதலையும் வேகமா நினைச்சபடி பண்ணிட முடியாது தம்பி' என்று மாமா தங்க பாண்டியன் தனசேகரனிடம் வருத்தப்பட்டுக் கொண் டார். "... : * , . . . .

அதில்லே மாமா பொதுவிலே இங்கேயே காரியஸ் தரா இருந்து எல்லாரிட்டவும் சுமுகமாப் பழகியிருக்காரு. திடீர்னு முகத்தை முறிச்சுக்க்த் தயங்கறாரு, அவ்வளவு: தான்." - ... ', ... . . . . . . . . . . . . . . . . . . . . . . .

இங்கே அவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும். போதே அந்தப்புரத்தின் டமாரச் செவிடான வேலைக்காரி' யோடு உள்ளே போயிருந்த காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வை மட்டும் தனியே திரும்பி வந்தார். மாமா வினவினார் : .

ஏன்? என்ன சொல்றாங்க அவங்க இங்கே வரமாட்

டாங்களாமா?: . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/76&oldid=553048" இலிருந்து மீள்விக்கப்பட்டது