பக்கம்:கற்சுவர்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 75

"வரமாட்டோம்னு நேரடியாச் சொல்லலே. அந்த மூணுமாவடி இளையராணிதான் தைரியமா வந்து எதிர்த்துக் கேட்டாங்க தனசேகரனுக்கு நாங்க அந்நிய மாணவங்களா என்ன? அவனுக்கு நாங்கள்ளாம் சித்தி முறை தானே வேணும்? அவனே இங்கே வந்து எங்ககிட்டப் பேசப் பிடாதா? வரச் சொல்லுங்களேன்னு அவங்க சொல் றாங்க, ; : . . - “... . .

. . . "அதுக்கு நீங்க என்ன பதில் சொன்னிங்க சேர்வை, காரரே?" . . . - 3.

"நான் என்ன பதில் சொல்ல முடியும்? நீங்க சொன் னதை அவங்க கிட்டக் கட்டாயம் சொல்றேன்னு சொல்லி விட்டு வந்தேன்.'" . . . .

"அப்போ நாம் இங்கே காத்துக்கிட்டிருக்கிறதில்ே அர்த்தமில்லேன்னு சொல்லுங்க. அவங்க யாரும் இங்கே வரமாட்டாங்கன்னு தெரியுது." ベベ - ; : * 3

"நான் வேணா உள்ளே போயி நறுக்குன்னு சொல்ல, வேண்டியதைச் சொல்லிவிட்டும் வந்துடட்டுமா மாமா? என்ன சொல் lங்க?' என்று. தனசேகரன் தங்கபாண்டி, யனைக் கேட்டான். தங்கபாண்டியன் வேண்டாம்' என்பதுபோல் தலையை ஆட்டினார். மாமா தங்கபாண்டி யனின் முகத்தில் மலர்ச்சி மறைந்து கடுமை படர்ந்தது. அவர் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வையை நோக்கி, "இந்தப் பொம்பிளைங்கள்ளாம் இங்கே அரண்மனைக்கு வந்த தேதி, ராஜாவோட அவங்களுக்குத் தொடுப்பு சம்பந்தப்பட்ட வருஷம் இதெல்லாம் பற்றி ஆபீஸ் ரெக் கார்டிலே ஏதாச்சும் விவரம் இருக்குமா? தெளிவாகச் சொல்லுங்க" என்று கேட்டார். o .

"அதெல்லாம் எதுவும் கிடையாதுங்க. இந்த மாதிரி, வைப்பு விவகாரங்களுக்கும் அரண்மனை ஆபீஸுக்கும். சம்பந்தமே கிடையாது. அது ராஜாவோட சொந்த விவகாரம்னு விட்டுடறதுதான் வழக்கம். அந்தப்புரத்திலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/77&oldid=553049" இலிருந்து மீள்விக்கப்பட்டது