பக்கம்:கற்சுவர்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#6 சுற்சுவர்கள்

எத்தினிப் பேர் இருக்காங்கங்கிற எண்ணிக்கையே அதிகார பூர்வமா எங்களுக்குத் தெரியாது. நாங்களாத் தனிப்ப்ட்ட முறையிலே தெரிஞ்சுகிட்ட எண்ணிக்கைவைத்தான் நீங்க விசாரிச்சபோதுகூட நான் சொன்னேன்.” . . . . . . .

செத்துப் போனதுதான் போனாரு. இத்தினி தலை வேதனையையுமா வெச்சுப்போட்டுப் போகனும்?'

'இது ஒரு டெலிகேட் ப்ராப்ளம். கொஞ்சம் நிதா னமாப்பார்த்துத்தான் இதை முடிவு பண்ணனும். மத்ததை முதல்லே கவனிக்கலாம்' என்று சேர்வைகாரர் சொன்ன போது, -

'நீங்க சொல்றதும் ஒரு விதத்திலே சரிதான். ஆனால் சத்திரம் மாதிரி நாற்பது அம்பது பேருக்கு எத்தினி நாள் சாப்பாடு போட்டுக்கிட்டிருக்க முடியும்? எவிக்ஷன் நோட்டீஸ் குடுத்தாவது காலி பண்ணாட்டித் தனசேகரன் மாசா மாசம் ஐயாயிரம், பத்தாயிரம்னு எங்கேயாவது கடன் வாங்கித்தான் இனிமே இந்த அரண்மனையைக் காப் பாத்த முடியும். இல்லாட்டித் திருவோட்டை ஏந்திக் கிட்டுப் பிச்சை எடுக்கப் போக வேண்டியதுதான்' என்று மாமா தமது அபிப்பிராயத்தைக் காரியஸ்தரிடம் தெரிவித்தார். -

இளைஞன் தனசேகரனுக்குக் காலஞ்சென்ற தன் தந்தை மேல் கோபம் கோபமாக வந்தது. இவ்வளவு பிரச்னைகளையும், கடன்களையும் சுமைகளையும் வைத்த தோடல்லாமல் தன்னைத் தொல்லைகளிலும் சிக்க வைத்து விட்டுப் போய்விட்டாரே, என்ற நினைப்பு மனத்தில் உறுத் தியது. தான் கடைசி நாட்களில் அவரை விட்டுப் பிரிந்து அக்கறைச் சீமையில் இருந்துவிட்டு வந்திருந்தாலும் அவர் சேர்த்து வைத்திருந்த பாவமூட்டைகளும், கடன் சுமை க்ளும், பிரச்னைத் தொல்லைகளும் விலாசம் தவறாமல் தன்னையே வந்தடைந்திருப்பதை அவன் கண்டான்.

புறப்படும் போது எவ்வளவு வேகமாக அவர்கள் மூவரும் அந்தப்புரத்திற்குள் புறப்பட்டு வந்திருந்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/78&oldid=553050" இலிருந்து மீள்விக்கப்பட்டது