பக்கம்:கற்சுவர்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 7 7

களோ அவ்வளவு வேகமாக எதையுமே அங்கே சாதிக்க

முடியாமல் ஏமாற்றத்தோடுதான் திரும்பினார்கள்.

"நவீன முறைகள், நவீன சிந்தனைகள் எதனாலும் இந்த அரண்மனையிலுள்ள பழைய பிரச்னைகளை வேக் மாகவும் துணிந்தும் தீர்த்துவிடமுடியும் என்று என்ன்ால் நம்பமுடியவில்லை மாமா' என்றான். தனசேகரன்.

'ஒடவும் முடியாமே நிற்கவும் இடமில்லாமே இரண் டுங் கெட்டானாக வச்சிருக்காங்க எல்லாத்தையும். நம்ம் வேகத்துக்கு இங்கேயிருக்கிற ஆளுங்களோ பிரச்னைகளோ ஒத்துவர மாதிரித் தெரியலே தனசேகரன்?' என்று மாமா வும் அதை ஆமோதித்தபோது காரியஸ்தர் குறுக்கிட்டு, "பல நூற்றாண்டு விஷயங்களைச் சில நிமிஷங்கள்ளே வைண்ட்-அப் பண்றதுன்னாக் கஷ்டம்தான்' என்றார். அதன்பின் இரண்டு மூன்று வாரங்கள் பீமநாதபுரத்தில் திமிஷமாக ஒடிப்போய் விட்டன. -

அதற்கப்புறம் ஒரு வார காலம் சமஸ்தானத்துக்கு உட் பட்ட கோவில்கள், சொத்துக்கள், தேவாரப் பாடசால்ை கள், கல்வி நிலையங்கள், நிலங்கள், தோட்டங்கள் இருந்த கிராமங்களுக்கு அவர்கள் ஒரு ஜீப்பில் பிரயாணம் செய்தார். கள். காரியஸ்தர், இளையராஜா தனசேகரன், மாமா தங்க பாண்டியன் மூவரும் அந்தப் பிரயாணத்தை மேற்கொண்ட போது மேலும் பல புது விஷயங்கள் தெரிய வந்தன. அதனால் குழப்பங்கள் அதிகமாயினவே ஒழியக் குறைய வில்லை. - - . .

பழைய பீமநாதபுரம் சமஸ்தானத்துக்குள் முன்பு அடங்கியிருந்த பரிமேய்ந்த நல்லூர் என்ற கிராமத்தில் போய் அவர்கள் தங்கி இருந்தபோது சில புது விவரங்கள் தெரிய வந்து அவர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தின. புராணச் சிறப்பும் வரலாற்றுச் சிறப்பும் மிகுந்த அந்த இளரில் சமஸ்தானத்துக்குச் சொந்தமான ஒரு பெரிய பாடல் பெற்ற கோவில் இருந்தது. தேவதாசிகள் அந்தக் கோவிலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/79&oldid=553051" இலிருந்து மீள்விக்கப்பட்டது