பக்கம்:கற்சுவர்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 கற்சுவர்கள்

சதிர் ஆடுவதற்கு என்று மூன்று தலைமுறைக்கு முன்பு நியமிக்கப்பட்டு சமஸ்தான மானியங்களும் கோவில் ஸ்தா விகமும், மரியாதைகளும் வழங்கப்பட்டிருந்தன. சமஸ்தான ஆளுகைக்குட்பட்ட தேவதாசிகளில் மிகவும் அழகும் கலைத் திறனும், நளினமும் உள்ளவர்கள். இந்தப் பரிமேய்ந்த நல்லூர்ப் பெண்கள்தான் என்று பல சமயங்களில் பலர் கூறிக்கொள்ளக் கேட்டிருக்கிறான் தனசேகரன். மாணிக்க வாசக சுவாமிகள் அமைச்சராக இருந்து பாண்டிய மன்ன னுக்குக் குதிர்ைகள் வாங்குவதாகச் சொல்லி அந்தப் பொருளை ஆலயப் பணிக்குச் செலவழித்துவிட்டு அகப் பட்டுக்கொண்ட போது இறைவன் அருளால் குதிரைகள் கூட்டம் கூட்டமாக வந்தபோது தெய்வீகத் திருவுடைய குதிரைப் பாகர்களும் இறைவனும் முதன் முதலில் குதிர்ை களை மேயவிட்ட இடம் இதுதான் என்று ஒர் ஐதீகம் இருந்தது. அந்த ஐதீகத்தின்படிதான் பரிமேய்ந்த நல்லூர்' என்னும் பெயரே அந்த ஊருக்கு ஏற்பட்டிருந்தது. ஆறு கால பூஜையும் ஆண்டிற்கு மூன்று பிரம்மோற்சவங்களும் உள்ள சிறந்த திருத்தலமாக அது விளங்கி வந்தது. சமஸ் தான அந்தஸ்து, ராஜமான்யம் எல்லாம் போன பின்னரும் கூடக் கோவில்களும், தர்ம ஸ்தாபனங்களும், அரச குடும்பத் தின் பொறுப்பிலும் பராமரிப்பிலுமே தொடர்ந்து இருந்: தன. கோவிலுக்கு உண்டியல்கள் மூலமும் காணிக்கைகள், பிரார்த்தனைகள் நேர்த்திக் கடன்கள் மூலமும் நிறைய வருமானம் இருந்தது. நிலங்கரைகள், நகைகள், எல்லாம் ஏராளமாக இருந்தன. ஆண்டின் எல்லா மாதங்களிலுமே தரிசனம் செய்வதற்கு நிறையப் பெருமக்கள் அங்கே வந்து போய்க் கொண்டிருந்தனர். பரிமேய்ந்த நல்லூர் பீமநாத புரம் சமஸ்தானத்தின் இரண்டாவது பெரிய ஊராகி யிருந்ததன் காரணமாக அங்கே பழைய நாளிலிருந்தே சின்ன அரண்மனை போல ஒரு நவீன வசதிகள் உள்ள விருந்தினர் விடுதி இருந்தது. --

பரிமேய்ந்த நல்லூருக்கு வந்ததும் மாமாவும். தனசேகர - லும், காரியஸ்தரும் ஆலயத்துக்குப் போய் சுவாமி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/80&oldid=553052" இலிருந்து மீள்விக்கப்பட்டது