பக்கம்:கற்சுவர்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 79

தரிசனமும் அர்ச்சனையும் செய்தார்கள். சமஸ்தானத்தின் கீழ் நியமிக்கப்பட்டிருந்த ஆலய நிர்வாக அதிகாரி காரியஸ்தர் பெரியகருப்பன் சேர்வையிடம் தனியாகச் சில நிமிஷங்கள் பேச வேண்டும் என்று வந்ததிலிருந்து பறந்து கொண்டிருந்தார். - - - "தனியா எங்கிட்ட மட்டும் என்ன ஐயா பேசக் கிடக்கு? எல்லாருக்கும் முன்னாடியே அதைப் பேசலாமே? கோவில் வரவு- செலவு விஷயத்திலே இரகசியம் என்ன ஐயா வேண்டிக் கெடக்கு? என்று நிர்வாகியை இரைந்தார் காரியஸ்தர். . .

இல்லிங்க, நீங்க தயவு செய்து என்னை மன்னிக் கணும்...இது பெரிய ராஜா சம்பந்தப்பட்ட விஷயம். உங்க கிட்டச் சொல்லலேன்னா இப்போ நான் தலை தப்ப முடியாது. உடனே சொல்லியாகணும். நான் குழந்தை குட்டிக்காரன். என்னை நீங்கதான் காப்பாத்தணும்...'

முதலில் காரியஸ்தருக்குக் கோபம் வந்தது. - . ஆனால் அந்த நிர்வாகி திரும்பத் திரும்பப் புலம்பிய தைக் கேட்டதும் காரியஸ்தருக்கு மனத்தில் ஏதோ சந்தேகம் தட்டியது. இது ஏதோ பெரிய விவகாரமாயிருக்க வேண்டும் என்று பட்டது. சமஸ்தானத்து உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் கள் சம்பள விஷயத்தில் கூடக் கடைசிக் காலத்தில் பெரிய மகாராஜா அற்பத்தனமாக நடந்து கொண்டது நினைவு வந்தது. அதைப் போலவே இந்தக் கோவில் விஷயத்தில் இங்கும். ஏதோ குழப்பம் நடந்திருக்கிறது என்று தெரிந்தது. சரி! அப்போ மதியம் தனியாப் பேசலாம். பகல் சாப்பாடு முடிஞ்சதும் இளையராஜாவும், மாமாவும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்குவாங்க, அந்த நேரத் திலே நாம் பேசலாம். நீங்க என்னைத் தேடிவர வேண்டாம்.'நானே தேவஸ்தான ஆபீஸுக்கு வரேன்! நீங்க. அங்கே இருங்க போதும்' என்று தேவஸ்தான நிர்வாக அதிகாரியிடம் கூறினார் காரியஸ்தர். நிர்வாக அதிகாரி இதற்கப்புறம்தான் நிம்மதி அடைந்தார். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/81&oldid=553053" இலிருந்து மீள்விக்கப்பட்டது