பக்கம்:கற்சுவர்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 கற்சுவர்கள்

பிருப்பது தெரியவந்தது, சிலரிடம் நிறையப் பணம் வாங்கிக் கொண்டு பெறுமானத்தைவிடக் குறைந்த தொகைக்கு நிலங்களைக் குத்தகை பேசி விட்டிருந்தார். தனசேகரன் இந்த ஊழல்களையெல்லாம் பார்த்துக் குழம்பி னாலும் மாமா பொறுமையாகவும் நிதானமாகவும் ஒவ்வொன்றையும் எப்படிச் சரிப்படுத்தலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

கோவில் நிலக் குத்தகைதாரர்களைச் சந்தித்துப் பேசி முடித்ததும் பரிமேய்ந்த நல்லூர்த் தேவஸ்தானத்து நகை களைப் பழைய நிலையில் உருவாக்கி வைப்பதாக மாமா வும், தனசேகரனும், குருக்களுக்கும், தேவஸ்தான நிர்வாக அதிகாரிக்கும் வர் க் குறு தி அளித்தார்கள். அடுத்து ஆவிதானிப்பட்டி என்ற ஊருக்கு அவர்கள் சென்றார்கள். அந்த ஆவிதானிப்பட்டி சமஸ்தான்த்தின் பழம் புலவர்கள் நிறைந்திருந்த ஊர். பழைய ராஜாக்கள் நாளிலேயே அந்த ஊருக்கு இண்டலெக்சுவல் டவுன் ஆஃப் தி ஸ்டேட்' என்று ஒரு பேரே உண்டு. அந்த ஊரில் ஒரு புராதனமான மாரியம்மன் கோயிலும், ஒரு பெரிய வாசகசாலையும், அந்த வாசகசாலையின் மற்றோர் அங்கமாகிய 'மானுஸ் கிரிப்ட்ஸ் லைப்ரர் எனப்படும் ஏட்டுச் சுவடிகள் நூல் நிலைய நிர்வாகமும், மாரியம்மன் கோவில் நிர்வாகமும் கூட ஓரளவு ஊழல் மயமாக ஆக்கப்பட்டிருக்கும்போலத் தெரிந்தது. இந்த ஆவிதானிப்பட்டியில் அரண்மனைக்குச் சொந்தமான விருந்தினர் விடுதி எதுவும் இல்லையாகை யால் பி.டபிள்யூ.டி, இன்ஸ்பெக்ஷன் பங்களாவில் மாமா வும். தனசேகரனும் தங்கிக் கொண்டார்கள். பெரிய கருப்பன் சேர்வை யாரோ உறவினர் வீட்டில் தங்கிக் கொண்டார். புலவர்கள் ய ர ம் ப ைர யி ல் சமஸ்தான மானியத்தை அனுபவித்துக் கொண்டிருந்த சிலரும் அப்போது அந்த ஊரில் இருந்தார்கள். இந்த ஊரில் உள்ள பிரபந்தங்களையும், பழைய ஏட்டுச் சுவடிகளையும் சமஸ் தான செலவில் அச்சிட்டு நூலாக வெளியிட வேண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/84&oldid=553056" இலிருந்து மீள்விக்கப்பட்டது