பக்கம்:கற்சுவர்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 கற்சுவர்கள்

"பார்த்தியா, பார்த்தியா? மறுபடியும் இளையராஜா தானா? அதானே வேணாம்னு இவ்வளவு நேரமாத் தொண்டைத் தண்ணி வத்தினேன்? ஆயிரத்தித் தொளா யிரத்தி எழுபத்து மூணாம் வருஷத்திலே...போயி...இதெல் லாம் என்ன பைத்தியக்காரத்தனம் நம்மை நாமே ஏமாத்திக்கலாம்னா இப்பிடி எல்லாம் ராஜா சக்ரவர்த்தி அது இதுன்னு பொய்யாக் கூப்பிட்டுச் சந்தோஷப் பட்டுக்கலாம். ’’

"அப்பிடியில்லீங்க!...வந்து...?’’

"வந்தாவது, போயாவது இங்கே, இந்த அரண் மனைக் கோட்டை மதில் சுவருங்க இருக்கே. இதை வெளி உலகமே நம்ம கண்ணுக்குத் தெரியாதபடி அந்தக் காலத்திலே ரொம்ப உயரமாத் துக்கிக் கட்டிப்பிட்டாங்க, அதான் உங்களுக்கெல்லாம் வெளி உலகமே தெரியலே. காலம் வேகமா ஓடிக்கிட்டுருக்குங்கறதும் தெரியவே. நீங்கள்ளாம் இன்னும் நூறு வருசத்துக்குப் பின்னாடி கடந்த காலத்திலேயே வாழ்ந்துக்கிட்டு இருக்கீங்க. சொப் பனத்துலேயே கூட வாழlங்க. சமஸ்தானமும் ராஜாப் பட்டமும் அஸ்தமிச்சு எத்தினியோ வருஷம் ஆகப்போகுது. அதெல்லாம் ஏற்கெனவே அஸ்தமிச்சுப் போச்சுங்கறது. அரண்மனை வெளிப்புறத்து மதில்களைத் தாண்டி இன்னும் இங்கே உள்ளே உங்களுக்கெல்லாம் தெரியலே. அதான் கோளாறு. முதல்லே இந்த மதில் சுவர்களை இடிச்சு. தள்ளனும். அப்பத்தான் வெளி உலகத்திலே என்ன தடக்குதுன்னு இங்கே உள்ளார இருக்கிறவங்களுக்குத் தெரியும்.' - -

வந்திருக்கிறவரு ரொம்ப நேரமா வெளியே காத்துக் கிட்டிருக்காரு...' х

'சரி உள்ளே வரச் சொல்லு."

வேலைக்காரன், தேடி வந்திருப்பவரை உள்ளே அழைத்து வருவதற்காகச் சென்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/88&oldid=553060" இலிருந்து மீள்விக்கப்பட்டது