பக்கம்:கற்சுவர்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ss - கற்சுவர்கள்

"இன்னமும் இளையராஜா இளையராஜான்னு தப்பா தானே நீங்க பேசிக்கிட்டிருக்கீங்க மிஸ்டர் சாமிநாதன்? போகட்டும். வந்த காரியத்தையாவது சிம்பிளா சொல் லுங்க.."

"அந்த மோகினி பெயிண்டிங்க்ஸ் விஷயமா பெரிய ராஜாகிட்டப் பேசினேன்.'

  • என்ன பேசினீங்க...?’’

'அந்த பிரஞ்சுக்காரன் இந்த "சீரிஸ் முழுவதையும் பதினையாயிரம் ரூபாய்க்குக் கேட்கிறான்...'

"மிஸ்டர் சாமிநாதன்! முதலில் உங்களுக்கு நான் சில உண்மைகளைச் சொல்லுகிறேன். எங்க ஃபாதரோட நீங்க ரொம்ப நாளாப் பழகlங்க. அதனாலே, அவரோட எல்லா வீக்னஸ்ஸும் உங்களுக்குத் தெரியும், அவருடைய புத்திர பாக்கியங்களிலே என்னைத் தவிர மீதி மூணு பேரும் காலேஜிலே, ஸ்கூல்லே படிச்சிக்கிட்டிருக்காங்க. ஒவ்வொ ருத்தனுக்கும் மாசம் பிறந்தா எழுநூறு ரூபாய்க்குக் குறை: யாமே பேங்க் டிராஃப்ட் எடுத்து மெட்ராஸுக்கு அனுப்பி யாக வேண்டியிருக்கு. சாதாரணமா மத்தக் குடியானவங்க வீட்டுப் பையன் இதே படிப்பை மாதா மாதம் முந்நூறு ரூபாய்க்கும் குறைவாகச் செலவழித்துப் படித்துவிடுவான். சமஸ்தானத்து யுவராஜா என்கிற பொய்யான பிரமை யினாலே என் தம்பிகள் டம்பத்துக்காகவும், ஜம்பத்துக்காக வும் அதிகமாகச் செலவழிக்கிறாங்க. எத்தனையோ வீண் செலவுகளைத் தாறுமாறாப் பண்றாங்க! அரண்மனைங்கிற இந்தப் பெரிய மாளிகைக்குள்ளே இன்னும் கலியானங் கட்டிக் கொடுக்க வேண்டிய பெண்கள் ஒரு டஜன் எண்ணிக்கைக்குக் குறையாம இருக்காங்க. எங்க ஃபாதரோ அன்னிக்குப் பிரிட்டிஷ்காரன் காலத்திலே எப்படி ஜபர் தஸ்தா இருந்தாரோ அப்படியே இன்னும் ஜபர்தஸ்தா இருக்காரு. அவரோட பழகறவங்களும் சிநேகிதங்களும்கூட. அதே மாதிரிதான் இருக்காங்க. ஃபாதரோட கிளம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/90&oldid=553062" இலிருந்து மீள்விக்கப்பட்டது