பக்கம்:கற்சுவர்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 - கற்சுவர்கள்

தான் அப்புறம் நீங்க சொல்லப் போறதை பொறுமையாகக் கேட்க முடியும் மிஸ்டர் சாமிநாதன்!"

{ 米 将

ஆவிதானிப்பட்டியில் தங்கியிருந்த இடத்தில் கிடைத்த பழைய வாரப் பத்திரிகையில் தற்செயலாக அகப்பட்ட ஓர் அரண்மனை ஏலத்துக்கு வருகிறது என்ற இந்தச் சிறு கதையில் மேலே கண்ட பகுதிவரை படித்த தனசேகரனுக்கு மனத்தில் தீவிரமாகச் சந்தேகம் தட்டத் தொடங் கியது, -

அந்தச் சிறுகதை தங்களையும் தங்கள் சமஸ்தானத். தையும் நன்றாக அறிந்த யாரோ ஒருவரால்தான் எழுதப் பட்டிருக்கிறது என்று புரிந்தது. தந்தையோடு கருத்து வேறுபாடு கொண்டு முரண்பாடுத் தான் மாமாவின் தயவை: நாடி மலேசியாவுக்குப் புறப்பட்ட காலத்தைப் பின்னணி யாகக் கொண்டு அந்தச் சிறுகதை உருவாக்கப்பட்டிருப்பது தனசேகரனுக்கு நன்கு புரிந்தது. சும்மா ஒரு கண் துடைப்புக்காகவோ மாறுதலுக்காகவோ "பீமநாதபுரம்" என்ற பெயரைச் சீமநாதபுரம்' என்று மாற்றிவிட்டால் போதுமென்று அந்தச் சிறுகதையின் எழுத்தாளர் எண்ணி யிருக்கவேண்டும். அல்லது சட்டப்படி தம் எழுத்தின் மேல் நடவடிக்கை எதுவும் எடுத்து விடாமல் தடுத்துத் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு அந்தப் பெயர் மாற்றத்தை அவர் மேற்கொண்டிருக்கவேண்டும். பீமநாதபுரம் பெரிய ராஜாவான காலஞ்சென்ற தன் தந்தையையும், தன்னை யும். தங்கள் சமஸ்தான நிலைமைகளையும் அந்தச் சிறுகதை யின் எழுத்தாளர் எப்படி அவ்வளவு துல்லியமாகப் படம் பிடித்தார் என்பதை நினைக்க ஆச்சரியமாக இருந்தது. தனசேகரனுக்கு. அப்போதே மாமா தங்கபாண்டியனைத். ஆாக்கத்திலிருந்து எழுப்பி அந்தக் கதையை உடனே அவ. சிடம் படிக்கச் சொல்லவேண்டும் என்று தனசேகரனுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/92&oldid=553064" இலிருந்து மீள்விக்கப்பட்டது