பக்கம்:கற்சுவர்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 9 I

ஆவலாயிருந்தும் மாமாவின் இயல்பை அறிந்து தன் ஆவலை அவன் அப்போது அ ட க் கி க் கொள் ள வேண்டிய தாயிற்று. -

நல்ல தூக்கத்தில் எழுப்பினால் மாமாவுக்குப் பேய்க் கோபம் வரும் என்பது தனசேகரனுக்கு நன்கு தெரியும். எனவே மாமாவைத் துர க் கத் தி லி ரு தி து எழுப்புகிற அசாத்தியமான எண்ணத்தைக் கைவிட்டு விட்டுக் கதையை மேலே படிக்கத் தொடங்கினான். தனசேகரன்:

"கேட்கிறேன், சொல்லுங்கோ, பெரிய ராஜாவைப் பெங்களுர் ரேளிலே சந்திச்சதைப்பத்தி நான் சொன்னேன்’’ என்று ஞாபகமூட்டினார் சாமிநாதன்.

"பெங்களூர் ரேஸ்லே மட்டுமென்ன? எங்கே ரேஸ் நடத் தாலும் எங்க ஃபாதரை நீங்க அங்கே சந்திக்கலாம் மிஸ்டர் சாமிநாதன்! அதாவது தமிழிலே ஏதோ ஒரு வசனம் சொல்லுவாங்களே, "கழுதை .ெ க ட் டா ல் குட்டிச் கவர்னு'...." *

"நோ நோ... பெரியவங்களை அப்படியெல்லாம் சொல்லப்படாது...' - -

"பெரியவங்க உ எண் ைம யி லே ேய பெரியவங்களா நடந்துக்கிட்டாவில்லே அதெல்லாம் பார்க்கணும்...”*

இந்த இடத்தைப் படிக்கிறபோது தனசேகரனுக்கு மறுவடியும் அடக்கமுடியாத சிரிப்பு மூண்டது. தனக்குத் தானே எங்கே பைத்தியம்போல இரைந்து சிரித்து விடு வோமோ என்று அவனுக்குப் பயமாயிருந்தது. நடுராத்திரி யில் அவன் தனக்குத் தானே சிரித்துக்கொள்வதை மாமா எங்கே எழுந்து பார்த்துவிட நேருமோ என்று வேறு தயக்கமாயிருந்தது. பீமநாதபுரம் சமஸ்தானத்து நிலைமை களை அப்படி அப்படியே படம் தீட்டி வைத்ததுபோல இருந்த அந்தச் சிறுகதையின் ஆசிரியனைத் தேடித் துப்பற்றிய விரும்பினான் தனசேகரன். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/93&oldid=553065" இலிருந்து மீள்விக்கப்பட்டது