பக்கம்:கற்சுவர்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 9.3

பேர் இரண்டாயிரம் பேருக்கு ஒரே சமயத்தில் சோறு வடிக்க, சாம்பார் வைக்க என்கிற் உபய்ேர்கங்களுக்கிர்க் ஏராளமான அண்டாக்கள். குண்டாக்கள். துர்க்கு வ்ர்ளிகள். பாத்திரங்கள் எல்லாம் இங்கே ஒரு கட்டிடம் நின்ற்ய அடைஞ்சு கிடைக்குது. இப்போதெல்லாம் இந்த விட்டின் மாதாந்திர வரவு-செலவுகளே அப்படிப் பாத்திரம் பண்டங் கள், பழைய தட்டுமுட்டுச் சாமான்களை விற்றுத்தான் நடக்கிறது. கீழவெளி வீதியிலே உள்ள சோமநாத நாடார் பாத்திரக் கடையிலே பின் பக்கமாப் போய் நீங்க நுழைஞ்ா அங்கே எங்க பாத்திரங்களை அடிச்சு உடைச்சு நொறுக்கிப் புதுப்புதுப் பாத்திரமா மாத்தநதுக்காக உருக்கிக் கொண் டிருப்பாங்க. அந்தப் பழைய காலத்துப் பெரிய பாத்திரங் களிலே ரெண்டு மூணு ஆள்கூட உள்ளாரப் புகுந்து உட்கார ாைம். எல்லாம் அந்தக் காலத்துப் வார்ப்படம். இப்ப விற்கிற காப்பர் விலை, பித்தளை விலையிலே அதை எல்லாம் நல்லா விற்க முடியுது. பழைய பாத்திரங்களிலே கண் பார்வைக்கு நல்லாப் படறாப்பிலே, பாலஸ் சீமநாத புரம்’னு பேர் வெட்டியிருக்காங்க. கடைக்காரரு அந்தப் காத்திரங்களை எங்க கிட்டேருந்து பழைய விலைக்கு வாங்கி அடிச்சு உடைச்சு நொறுக்கி உருக்கறப்போ எப்படி அந்தப் பேர்கள் அழிஞ்சு போயிடுமோ அப்பிடியே எங்களைக் குறித்த காலத்துக்கும். மணிபர்ஸுக்கும ஒத்து வராத டம்பங்களும், ஆடம்பரங்களும், இன்றும் இனி மேலும் என்றும் அழிந்துவிட வேண்டும் என்றுதான் நானே

ஆசைப்படுகிறேன். - -

இந்த அரண்மனையும் இதன் ஜம்பங்களும், டம் பங் களும் இன்று ஒரு பெரிய 'அனக்ரானிஸம்'- அதாவது கால வழுவைப் போலாகிவிட்டன. இந்த நான்கு மதிற் சுகர் களுக்கும் உள்ளே இவ்வளவு பெரிய மாளிகையிலே இன்று மொத்தம் எட்டுநூறு பல்புகளும் நூற்றைம்பதுக்கு மேற் பட்ட டியூப் லைட்டுகளும், இருநூற்று எழுபது மின்சார விசிறிகளும், நாலு கார்களும், இரண்டு ஜீப்களும், நாலு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/95&oldid=553067" இலிருந்து மீள்விக்கப்பட்டது