பக்கம்:கற்சுவர்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 9莎

ராஜா ராணி மனப்பான்மையிலேயே இருக்காங்க, ஒருத் தரும் ஒரு செளகரியத்தையும் குறைச்சுக்கத் தயாரா யில்லே. எதுக்குச் சொல்ல வந்தேன்னா இங்கே உள்ள இந்தக் கஷ்ட நெைைமகள் எப்பிடியோ மெட்ராஸுக்கு உங்க காது வரைகூட எட்டியிருக்குன்னு தெரியிது, அது தெரிஞ்சுதான் வசதியுள்ள வெளிநாடுகளுக்குச் சிலைகள், ஒவியங்கள், சிற்பங்கள், புராதனப் பொருள்களை ஏற்றுமதி செய்கிற 'ஏன்ஷியண்ட் ஆர்ட் டிரேடர்ஸ் கம்பெனியை வைத்து நடத்துகிற நீங்க என்னையும் ஃபாதரையும் தேடி அடிக்கடி சுற்றிச் சுற்றி வர்ரிங்க, இல்லையா?”

'நோ.நோ...உங்களுக்கு இஷ்டமில்லேன்னா நான் ஒண்ணும் வற்புறுத்தலே...நல்ல விெலை வருது. அதான் தேடி வந்தேன்.இதுலே எனக்குன்னு தனியா என்ன வந்தது?"

"அவசரப்படாதீங்க மிஸ்டர் சாமிநாதன்! நான் சொல்றதை முழுக்கக் கேளுங்க...!"

'எனக்கென்ன அவசரம்? சொல்லுங்கோ...'

'போனவாரம் ஒரு ஈவினிங்கிலே இந்த ஊர்ப் போலீஸ் இன் ஸ்பெக்டர் திடீர்னு என்னைத் தேடி இங்கே அரண் மனைக்கு வந்தாரு, ஒரு வெள்ளிச் சந்தனக் கும்பாவை எடுத்துக்காட்டி அதிலே எங்க குடும்ப பரம்பரையான அரண்மனை முத்திரை இருந்ததையும் என் கவனத்துக்குக் கொண்டு வந்து, இதை உங்க அரண்மனை வேலைக்காரி ஒருத்தி வெள்ளிக் கடையிலே பழைய விலைக்கு நிறுத்துப் போட வந்திருக்கா. அரண்மனை முத்திரை இருக்கிறதைப் பார்த்திட்டு கடைக்காரர் போலீஸ் ஸ்டேஷனுக்குத் தகவல் அனுப்பிச்சிட்டாரு. நாங்க உடனே அந்த வெள்ளிக் கடைக்குப் போயி வேலைக்காரியை லாக்கப்பிலே வச்சிட்டு இங்கே உங்களைத் தேடிவந்திருக்கோம். தயவு செய்து இதுபற்றி மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கலாம்: என்பதைத் தெரிவியுங்கள்' என்றார். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/97&oldid=553069" இலிருந்து மீள்விக்கப்பட்டது