பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4.

ந்த கலிங்கத்துப் பரணி என்ற அரிய நூலுக்குத் திறவுகோலாக அமைந்திருப்பது ' கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி ' என்னும் இந்த நூல். இத் திறனாய்வு நூலை எழுதியவர், என் அரிய நண்பரும் நன்கு கற்றவரும் வள்ளல் அழகப்பனாரின் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவருமாகிய அன்பர் சுப்பு ரெட்டியார் அவர்கள். அன்னார் கலிங்கத்துப் பரணியை நன்கு ஆராய்ந்து ஆங்காங்குள்ள நயங்களை யெல்லாம் இந்நூலில் அழகுபட எடுத்துக் காட்டியிருக்கிறார். கலிங்கத்துப் பரணி கற்பார்க்கு இந்நூல் பேருதவி செய்ய வல்லது.

'கடைதிறப்பின் உட்பொருள்' என்ற பகுதியில் திரு. ரெட்டியார் காட்டியிருக்கும் கருத்தே கொள்ளத்தக்கது. தமிழ் மக்கள் இந்நூலையும் இதற்கு மூலமாகிய கலிங்கத்துப் பரணி நூலின் சிறந்த பாடல்களையும் படித்து உணர்ந்து இன்புற்று உயரத் தமிழ்த் தாய் அருள்வாளாக.

வணக்கம்.

29–3–57 ராய. சொ.