பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கற்பனை ஊற்று

95


ஆனை சாயவ டுபரி ஒன்றுகைத்(து)
ஐம்ப டைப்பரு வத்தப யன்பொருஞ்
சேனை வீரர்நின் ருர்த்திடும் ஆர்ப்பினில்
திமிரி வெங்களத் திற்செவி டானவும்.[1]

[ஆனை-யானை ; பரி-குதிரை: ஆர்ப்பு-பேரொலி]

இத்தாழிசை செவிட்டுப்பேயின் நிலையைக் கூறுவது. குலோத்துங்கன் இளமைப் பருவத்தில் போர்மேற் சென்றபொழுது அவன் படைவீரர்களின் ஆர்ப்பொலியைப் பொறுக்கமாட்டாது ஒரு பேயின் காதிலுள்ள சவ்வு பிய்ந்துபோயிற்றாம்.

காளிதேவி வாழும் காட்டின் வெம்மையைக் கூறுங்கால் இன்னொரு வரலாற்று நிகழ்ச்சி கட்டப்பெறுகின்றது. குலோத்துங்கன் வடவரை வென்ற பின் பாண்டியருடன் போர் தொடுத்து அவர்களையும் வென்றான். அப்பொழுது புகையால் மூடப் பெற்ற பகைவரின் காவற்காட்டின் வெப்பமும் தேவி வாழும் காட்டின் வெப்பமும் ஒரே மாதிரியாக இருந்ததனவாம்.

முள்ளாறும் கல்லாறும் தென்னர் ஓட
முன்னொருநாள் வாளபயன் முனிந்த போரின்
வெள்ளாறும் கோட்டாறும் புகையான் மூட
வெந்தவனம் இந்தவனம் ஒக்கில் ஒக்கும்"[2]

என்ற தாழிசையில் இந்நிகழ்ச்சி கற்பனைத் திறத்

துடன் காட்டப்பெற்றமையைக் காண்க.


  1. 38.தாழிசை -149
  2. 39.தாழிசை-95