இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சுவைகளின் களஞ்சியம்
103
வைத்துக்கொள்கிறது; குருட்டுப்பேய் கையில் கூழ் ஏற்று அருந்துகிறது; இந்நிகழ்ச்சி,
ஊணா தரிக்கும் கள்ளப்பேய்
ஒளித்துக் கொண்ட கலம்தடவிக்
காணாது அரற்றும் குருட்டுப்பேய்
கைக்கே கூழை வாரீரே[1]
- [ஊண்-உணவு; ஆதரிக்கும்-ஆசைப்படும்; கலம்-
- பாத்திரம்; அரற்றல்-கதறியழல்]
என்ற தாழிசையில் சுட்டப் பெறுகின்றது.
- ஒர் ஊமைப்பேயின் நிலை இது.
பையாப் போடு பசிகாட்டிப்
பதலை நிறைந்த கூழ்காட்டிக்
கையால் உரைக்கும் ஊமைப்பேய்
கைக்கே கூழை வாரீரே[2]
- [பையாப்பு:துன்பம்; பதலை-பானை]
கருப்பத்துட னிருக்கும் பேய் பசியால் செவிகளடைத்துப் போகிறது. கூழைக்கண்டதும்காதடைப்பு நீங்குகிறது; நாக்கைத் துழாவிக் கொண்டு உண்ணுவதற்குத் தயாராக இருக்கின்றது. இதைக் கவிஞர்,
அடைத்த செவிகள் திறந்தனவால்
அடியேற் கென்று கடைவாயைத்
துடைத்து நக்கிச் சுவைகாணும்
சூற்பேய்க்கு இன்னும் சொரியிரே[3]
- [சூல்-கருப்பம்,சொரியீர்-வாருங்கள்]
என்று காட்டுகிறார். பேய்களிலும் குறை மதியுள்ளவை இருக்கும் போலும்! ஒரு பேய் ஓட்டைக்கலத்