பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


வெகுளிச் சுவை

பகைவர்கள் செய்த தீச்செயல்களை நினைத்து மனம் கொதிக்கும் நிலையைக் குரோதம் என்று கூறுவர். குரோதத்தின் அடிப்படையில் மலர்ந்த சுவையே வெகுளி எனப்படும். தான் திறை கொடாத செயலைக் காரணமாகக்கொண்டு குலோத்துங்கன் தன் நாட்டின் மீது படையை ஏவியுள்ளான் என்பதைக் கேள்வியுறும் அனந்தபன்பன் சினங்கொள்ளுகின்றான்.

அந்தரமொன் றறியாத வடகலிங்கர்
குலவேந்தன் அனந்த பன்மன்
வெந்தறுகண் வெகுளியினால் வெய்துயிர்த்துக்
கைபுடைத்து வியர்த்து நோக்கி[1]

[அந்தரம்-மாறுபட்டநிலை; தறுகண்-கொடுமை மிக்க]

பின்வருமாறு பேசுகின்றான்.

வண்டினுக்கும் திசையான மதங்கொடுக்கும்
மலர்க்கவிகை அபயற் கன்றித்
தண்டினுக்கும் எளியனோ எனவெகுண்டு
தடம்புயங்கள் குலுங்க நக்கே ;
கானரணும் மலையரனும் கடலரணும்
சூழ்கிடந்த கலிங்கர் பூமி
தானரணம் உடைத்தென்று கருதாது
வருவதுமத் தண்டு போலும்.[2]

[மலர்க்கவிகை-பரவுதலையுடைய குடை; தண்டு சேனை; வெகுண்டு -கோபித்து; கான்- காடு ; அரணம்- பாதுகாப்பு]

இத்தாழிசைகளில் வெகுளிச் சுவை பீறிட்டுக் கொண்டு வருவதைக் கண்டு மகிழ்க.


  1. தாழிசை-375
  2. தாழிசை-376, 377