பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுவைகளின் களஞ்சியம்

113


என்ற தாழிசையில் காணலாம். அடுத்து பரணி காட்டப்பெறுகின்றது.

அடக்கம் அன்றிதுகி டக்க எம்முடைய
அம்மை வாழ்கஎன வெம்மைபார்!
கடக்கம் அன்றபயன் வென்று வென்றிகொள்
களம்பெ ரும்பரணி யின்றுபார்![1]

என்ற தாழிசையில் பரணிக் காட்சியைக் கண்டு மகிழ்க.

தன் மாயா வித்தையால் போரில் இறந்துபட்ட குதிரைகளையும், வெகுண்டு துடிக்கும் வீரருடல்களையும் பயந்தோடும் யானைகளையும், பெருகியோடும் உதிர வெள்ளத்தையும் காட்டும் இந்திர சாலத்தை,

துஞ்சி வீழ்துரக ராசி பார்! உடல்
துணிந்து வீழ்குறைது டிப்பபார்!
அஞ்சி யோடுமத யானை பார்! உதிர
ஆறு மோடுவன நூறுபார்[2]

[துஞ்சுதல்-இறத்தல் ;துரகம்-குதிரை ]

என்ற தாழிசையில் காண்க. அடுத்து முறையே குருதி வெள்ளமும் நிதர்சனமாகக் காட்டப்பெறுகின்றது.

அற்ற தோளிவைஅ லைப்ப பார் !உவை
யருத நீள்குடர்மி தப்பபார் !
இற்ற தாள் நரியி ழுப்ப பார் ! அடி
யிழுக்கு மூளையில்வ ழுக்கல்பார்![3]

[அலைப்ப - குருதிவெள்ளம் அலைத்துச் செல்லலை; இற்ற -உடலினின்றும் இற்று விழுந்த ; தாள்-கால்கள்; அடி-பாதம்; இழுக்கும்-வழுக்கும் ]

  1. தாழிசை-164
  2. தாழிசை-165
  3. தாழிசை-166.