பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


நிணங்கள் பார்!திண்ம மனங்க னிந்தன்
நிலங்கள் பார்!நிலம் அ டங்கலும்
பினங்கள் பார்!இவைகி டக்க நம்முடைய
பேய லாதசில பேய்கள் பார் ![1]

[நினம்.கொழுப்பு ; மனம்-நாற்றம்; கனிந்த-முதிர்ந்த]

என்ற தாழிசையில் அவற்றைக் காணலாம். மேற்கூறிய தாழிசைகளில் வியப்புச் சுவை வெளிப்படுவதை அறியலாம். இன்னும், கலிங்கப் போருக்கெழுந்த படையின் பெருக்கத்தைக் கண்டவுடன் மக்கட்கு ஏற்பட்ட மருட்சியைக் காட்டும்,

அகில வெற்புமின்று ஆனை யானவோ?
அடைய மாருதம் புரவி யானவோ?
முகில னைத்துமத் தேர்க ளானவோ?
மூரி வேலையோர் வீரரானவோ?[2]

[வெற்பு-மலை; மாருதம்-காற்று; முகில்-மேகம்; வேலை-கடல்.]

என்ற தாழிசையிலும் வியப்புச் சுவையைக் காணலாம். மலைகள் யாவும் யானைகளாயிற்றோ? காற்று தான் குதிரைகளாக மாறினதோ?மேகங்கள் அனைத்தும் தேர்களாக வந்தனவோ? கடல்தான் போர் வீரர்களாகத் தோன்றினதோ? என்று மக்கள் வியப்பெய்துகின்றனர்.

சமநிலை

சமநிலை என்பது யோகியர் உள்ளத்தில் குடி கொண்டிருக்கும் ஒருநிலை, அந்தச் சுவைக்கு இந்த நூலில் இடம் இல்லை. போரை நாடுபவர்களிடம் எங்ஙனம் அமைதி இருத்தல் இயலும்?


  1. தாழிசை 167
  2. தாழிசை-347