பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கருணாகரத் தொண்டைமான்



ருணாகரத் தொண்டைமான் முதற் குலோத்துங்க சோழளின் படைத்தலைவர்களில் முதன்மை பெற்று விளங்கியவன்; கலிங்கப்போரை நேரில் சென்று நடத்தித் தன்னரசனான விசயதரனுக்கு வாகைமாலை சூடியவன். எனவே, கவிஞர் சயங்கொண்டார் குலோத்துங்கனைப் பாட்டுடைத் தலைவகைக் கொண்ட கலிங்கத்துப் பரணியில் இவனையும் சில இடங்களில் சிறப்பித்துப் பாடியுள்ளார். குலோத்துங்கனைத் திருமாலின் அவதாரம் என்று சிறப்பித்துப் பாடியவர். இவனை அத்திருமாலின் சக்கரம் என்று உருவகித்துப் பாடுகிறார்.[1] நூலில் இவனைப்பற்றி வந்துள்ள செய்திகளைத் தொகுத்துக் கூறுவோம்.

கருணாகரன் என்ற பெயர் இராமபிரானின் திருநாமங்களுள் ஒன்று என்பதைக் கம்ப ராமாயணத்தால் அறியலாகும். அணை கட்டுவதற்குமுன் இராமன் வருணனை வேண்டி தருப்ப சயனத்திலிருத்ததைக் கூறுங்கால்,


  1. தாழிசை -247, 363, 383