பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


கலிங்கப் போரின் வெற்றிக்குக் கருணாகரத் தொண்டைமானின் அடலாண்மையும் பெருவீரமும் முதற்காரணமாகும். சோழப் படைகளால் அழிக்கப் பட்டன போக எஞ்சி நின்ற கலிங்கப் படைகள் சிதறியோடி ஒளிந்தன. தொண்டைமான் வாகை சூடி குலோத்துங்கனை வந்தடைகின்றான். இதனைக் கவிஞர்,

கடற்கலிங்கம் எறிந்துசயத் தம்பம் நாட்டிக்
கடகரியும் குவிதனமும் கவர்ந்து தெய்வச்
சுடர்ப்படைவாள் அபயனடி அருளி னோடுஞ்
சூடினான் வண்டையர்கோன் தொண்டை மானே.[1]

[சயத்தம்பம்-வெற்றித்தூண்.]
என்று சிறப்பிக்கின்றார்.

முதற் குலோத்துங்கனது 45-ஆம் ஆண்டில் பொறிக்கப் பெற்ற ஆலங்குடிக் கல்வெட்டில் இக் கலிங்கப் போரின் விவரம் குறிப்பிடப் பெற்றுள்ளது. கல்வெட்டின் அப்பகுதி வருமாறு :

வடதிசை வேங்கை மண்டலங் கடந்து
தாங்கிய கலிங்கமுந் தழலெரி பரப்ப
விலங்கல் போல விளங்கிய வேந்தர்
விட்டவெங் கரியொடு பட்டனர் புரளப்
பொருகோ பத்தொடு போர்முக மதிர்வரு
கோமட் டையன் மாதவ னெதிர்பட
எங்க ராய னிகலவ ரேச்சனன்
மாப்பிறளா(?) மதகரி யிராசனன்
தண்டுபதி யாகிய தலைச்சே னாபதி
மண்டலிக தாமய னெண்பாத்(?)திசைமுகன்
போத்தயன் கேத்தணன் செருச்சே னாபதி
என்றிவ ரனவரும்


  1. தாழிசை-471