பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


இறந்தனன். இராசேந்திரன் தன் தந்தையின் பெரும்பிரிவிற் காற்றாது மிகவும் வருந்தினன். தந்தைக்கு ஆற்ற வேண்டிய இறுதிக் கடன்களை யெல்லாம் குறைவின்றிச் செய்தான். அம்மான்மார்களும் ஆன்றோரும் கூறிய ஆறுதல்களால் ஒருவாறு அவன் துன்பம் நீங்கியது. அமைச்சரும் உறவினரும் முடிசூட்டுவிழாவிற்கு ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினர்.

தென்னாட்டில் சோழர்கள் பல அரசர்களையும் தம்மடிப்படுத்தி முடி வேந்தர்களாய் மேன்மையுற்றுத் திகழ்ந்ததைப் போலவே, தக்கணத்தின் வட பாகத்தில் மேலைச் சளுக்கியர் பெரும் புகழுடன் விளங்கினர். இவ்விரு குலத்தரசர்களும் ஒருவரையொருவர் வென்று கீழ்ப்படுத்த வேண்டுமென்ற எண்ணங் கொண்டவரா யிருந்தனர். முதலாம் இராசராசன் காலத்திலிருந்தே சோழர்கள் கீழைச் சளுக்கிய மன்னர்கட்குத் தம் பெண்களை மணம் புரிவித்து அன்னாரைத் தமது நெருங்கிய உறவினராகச் செய்து கொண்டிருந்தனர். இதனால் கீழைச் சளுக்கியர் உறவு மேலைச் சளுக்கியருக்குக் கிடைக்கச் சந்தர்ப்பமே இல்லாது போய் விட்டது. ஆனல், சோழர்களின் வலியும் பெருமையும் வளர்ந்தோங்கின. அக்காலத்தில் மேலைச் சளுக்கியரின் அரசனாகத் திகழ்ந்தவன் ஆறாம் விக்கிரமாதித்தன்; ஒப்பற்ற பெருவீரன். அவன் கீழைச் சளுக்கியரைச் சோழர்களிடமிருந்து பிரித்துத் தன்பால் சேர்த்துக் கொள்ளும் காலத்தை எதிர்நோக்கியிருந்தான். வேங்கி நாட்டதிபன் இராசராச நரேந்திரன் இறந்


6. S. I. I. Vol. I, No. 39.