பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/139

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குலோத்துங்கன்

133


ததையறிந்து அதுவே தக்க காலம் என்று கருதி வனவாசியில் தன் பிரதிநிதியாகவிருந்த மாதண்ட நாயனான சாமுண்டராயன் தலைமையில் வேங்கி நாட்டிற்கு ஒரு பெரும் படையை அனுப்பி வைத்தான்.

அக்காலத்தில் சோழநாட்டு அரசனாகத் திகழ்ந்தவன் வீரராசேந்திரன்.[1] மேலைச் சளுக்கியர் படை வேங்கி நாட்டை நோக்கி வரும் செய்தி அவனுக்குக் கிடைத்தது. தன் முன்னோர் காலம் முதல் நெருங்கிய உறவினால் பிணைக்கப் பெற்றிருந்த வேங்கி மன்னரையும், தங்கள் ஆட்சிக்குட்பட்டிருந்த வேங்கி நாட்டையும் இழப்பது தன் ஆண்மைக்கும் வீரத்திற்கும் மாசு தரும் என்று எண்ணினான்; உடனே ஒரு பெரும் படையுடன் வேங்கி நாட்டிற்கு விரைந்தான். மேலைச் சளுக்கியர்கட்கும்


  1. முதலாம் இராசேந்திரனுக்குப் பிறகு சோனாட்டை ஆண்ட இராசாதிராசன் சளுக்கிய மன்னனான ஆகவ மல்லளனோடு புரிந்த கொப்பத்துப் போரில் கி பி. 1058-ல் உயிர் துறந்தான்; உடனே அவன் தம்பி விசயராசேந்திரன் பொருகளத்தில் முடி கவித்துக் கொண்டு போரை நடத்தி வெற்றி பெற்றான். (தாழி-204: S. i. 1. vol.-V. No. 64.) இவன் தன் மகள் மதுராந்தகியைத் தன் மருமகன் இராசேந்திரனுக்கு மணம் புரிவித்துக் கொடுத்தான். இவனும் சளுக்கியருடன் நிகழ்த்திய போரொன்றில் இறந்தான். இவனுக்குப் பிறகு இவன் தம்பி வீரராசேந்திரன் கி-பி 1663-ல் கங்கைகொண்ட சோழபுரத்தில் அரசு கட்டில் ஏறினான். இவன் பேராற்றல் வாய்ந்த பெரு வீரன். இவன் காலத்தில்தான் கூடல் சங்கமப் போர் நடைபெற்றது.