134
கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி
சோழர்கட்கும் ஒரு கடும் போர் நிகழ்ந்தது. போரில் சாமுகாட்டராயன் கொல்லப்பட்டான் ; அவன் கீழ் வந்த படைகள் யாவும் சிதறியோடின.
குலோத்துங்கன் தன் தந்தை இறந்த பிறகு வேங்கி நாட்டை ஆட்சி புரிந்தமைக்குத் தக்க சான்றுகள் இல்லை. அவன் சிறிய தந்தையான விசயாதித்தன் நாட்டையாள பெருவிருப்பங் கொண்டிருந்ததாலும், அவனும் இளைஞனாக இருந்தமையாலும், இளவரசுப் பட்டம் பெற்றிருந்தும்[1] நாட்டின் ஆட்சியைப் பெறமுடியவில்லை. அவன் மாமனான வீரராசேந்திரன் மேலைச்சளுக்கியருடன் போர் நிகழ்த்துவதில் பெரிதும் ஈடுபட்டிருந்தமையால், வேங்கி நாட்டின் நிலையை உணர்ந்து தன் மருமகன் விஷயத்தில் தலையிடுவது இயலாததாயிற்று. [2] நாட்டை விசயாதித்தனே ஆட்சி புரிந்து வந்தான். இதுபற்றி குலோத்துங்கனுக்கும் அவன் சிற்றப்பனுக்கும் பகைமை ஏற்பட்டிருந்தது என்பது விசாயாதித்தன் செப்பேடுகளாலும் அவன் மகன் சக்திவர்மன் செப்பேடுகளாலும் அறியக்கிடக்கின்றது.[3] ஆனால் அப்பகைமை முற்றாமல் நாட் செல்லச்செல்ல குறைந்து கொண்டே போய் இறுதி-