பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


ஒருவன்.[1] எனவே, இவன் வீரராசேந்திரன் காலத்துப் போர் நிகழ்ச்சிகள் சிலவற்றில் பங்கு கொண்டு இளமையிலேயே போரில் சிறந்த பயிற்சி பெற்று ஒப்பற்ற வீரனாகத் திகழ்ந்தான் என்று கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை.

வீர ராசேந்திரன் தான் இறப்பதற்கு மூன்று ஆண்டுகட்கு முன்னர், கி. பி. 1007ல், தன் புதல்வர்களுள் ஒருவனுக்கு அதிராசேந்திரசோழன் என்ற அபிடேகப் பெயருடன் இளவரசுப் பட்டம் கட்டியிருந்தான் என்பது கல்வெட்டுக்களால் அறியப்படும் செய்தி. கி. பி. 1070 ன் தொடக்கத்தில் வீரராசேந்திரன் இறந்தவுடன் அதிராசேந்திரசோழன் முடிசூடப் பெற்றான். ஆனால், முடிசூடிய சில மாதங்களில் அதிராசேந்திரசோழன் நோய்வாய்ப்பட்டு இறந்தான். இச்செய்தி தஞ்சை மாவட்டத்திலுள்ள கூகூரில் காணப்படும் கல்வெட்டொன்றால் அறியக் கிடக்கின்றது.[2] இவன் உள்நாட்டுக் கலகத்தில் கொல்லப்பட்டான் என்று வழங்கும் செய்தியை திரு. பண்டாரத்தார் அவர்கள் பல ஆதாரங்

  1. தாழிசை-151. ஆனால் இவனது மெய்க்கீர்த்திகளில் அச்செயல் குறிக்கப் பெறவில்லை. எனவே, இவனது ஆட்சிக் காலத்தில் அது நிகழவில்லை என்பது ஒருதலை. ஆகவே, இவனது இளமைப் பருவத்தில் வீரராசேந்திரன் ஆட்சியில் நிகழ்ந்த கடாரப் படையெடுப்பில் இவனும் கலந்து கொண்டு அங்குச் சென்று போர் புரிந்திருத்தல் வேண்டும் என்பது நன்கு துணியப்படும். (T. V. சதாசிவ பண்டாரத்தார். பிற்காலச் சோழர் சரித்திரம்-பகுதி II பக். 5 அடிக் குறிப்பு)
  2. inscription 280 of 1917,