உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



140

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


களை வரலாற்று நூல்களில் விரிவாகக் கண்டு கொள்க. அவன் மேற்கொண்ட போர்களைப் பற்றி கலிங்கத்துப் பரணி குறித்திருப்பது முன்னரே சுட்டப் பெற்றது.[1] அவன் கருணாகரனைக் கொண்டு கி. பி. 1112-ல் நடத்திய வட கலிங்கப் போர்தான் கலிங்கத்துப் பரணியின் நூற் பொருளாக அமைந்தது. கலிங்கத்துப் பரணியில் குறிப்பிடப் பெறும் நிகழ்ச்சிகள் யாவும் செப்பேடுகளிலும் கல்வெட்டுக்களிலும் காணப் பெறும் செய்திகளோடு ஒத்திருப்பதாக அறிஞர்கள் ஆராய்ந்து கூறி

யுள்ளனர்.[2]


  1. இந்நூல் பக்கம்--60
  2. T. V. சதாசிவ பண்டாரத்தார் ; பிற்காலச் சோழர் சரித்திரம்-பகுதி-II. பக்கம்-29,