பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


தைப் பல சான்றுகளுடன் நிறுவியுள்ளமை இவ்டத்தில் நினைவு கூரத் தக்கது.[1]

புகழ்க்கொடை

சயங்கொண்டார் அபயன் என்ற முதற் குலோத்துங்கனுக்களித்த நிலைத்த புகழ்க்கொடை அவன் அவருக்கு உதவியிருக்கக் கூடிய நிலையாப் பொருட் கொடையினும் பல்லாயிரம் மடங்கு பெரிது என்பதை விதந்து கூற வேண்டியதில்லை. ஒரு சமயம் இவர் அபயன் மீது முனிவு கொண்டு பாடியதாக தமிழ் நாவலர் சரிதையில் காணப்பெறும் வெண்பாவாலும் இதனை நன்கு அறியலாம்.

அவ்வெண்பா :

        காவலர் ஈகை கருதுங்கால் காவலர்க்குப்
        பாவலர் நல்கும் பரிசுஒவ்வா—பூவில் நிலை
        யாகாப் பொருளை அபயன் அளித் தான்புகழாம்
        ஏகாப் பொருள் அளித்தேம் யாம் [2]

ஒருகால் சோழன் தனக்குச் செய்த சிறப்புச் சிறிது குறைந்து தன் மனத்தைப் புண்படுத்தவே அதனைப் பொறாராய்ச் சினங்கொண்டு சயங்கொண்டார் இதனைப் பாடினர் என்று கூறுவர்.

கவித்திறமை

சயங்கொண்டாரது பாக்களனைத்தும் பத்தழகுங் கொண்டனவாய் மிளிர்கின்றன. முன்னர்க் காணப் பெறும் ஆராய்ச்சிக் கட்டுரைகளால் இவர் பாடல்களில் சொல் நயமும் பொருள் நயமும் சந்த வின்பமும் கொப்புளித்து நிற்பதை அறியலாம். கலிங்கத்துப் பரணியில் 54-சந்த பேதங்கள் காட்டப்பெறு-


  1. 7. எஸ். வையாபுரிப்பிள்ளை: தமிழ்ச்சுடர் மணிகள்— கம்பர். பக்கம்-130.
  2. தமிழ் நாவலர் சரிதை செய்-116