உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


பித்துப் பாடுவதையும் பரணி என்று வழங்கும் மரபு உண்டு இவ்வாறு பரணி நூல் அரசர் முதலியவர்கள் மேல் செய்யப்படுவதன்றி, தெய்வங்கள் மேலும் தத்தம் ஆசிரியர்கள் மேலும் அறிஞர்களால் இயற்றப் பெற்று வழங்கும். கலிங்கத்துப் பரணி, தக்கயாகப் பரணி, இரணியவதைப் பரணி, கஞ்சவதைப் பரணி, அஞ்ஞவதைப் பரணி, மோகவதைப் பரணி, பாசவதைப் பரணி என்பன அவற்றிற்கு எடுத்துக் காட்டுக்களாகும். நூல் பாடுவோர் கொச்சகக்கலி என்னும் பாட்டின் உறுப்பாகிய ஈரடிக் கலித்தாழிசை என்ற உறுப்பை மேற்கொள்வது வழக்கம். இதனை,

மயக்கறு கொச்சகத் தீரடி இயன்று
நயப்புறு தாழிசை உறுப்பிற் பொதிந்து
வஞ்சி மலைந்த உழிஞை முற்றித்
தும்பையிற் சென்ற தொடுகழல் மன்னனை
வெம்புசின மாற்றான் தானை வெங் களத்தில்
குருதிப் பேராறு பெருகுஞ் செங்களத்து
ஒருதனி ஏத்தும் பரணியது பண்பே.[1]

என்ற பன்னிரு பாட்டியல் சூத்திரத்தால் அறியலாம். பொதுவாக நூலில் கடவுள் வாழ்த்து, கடைதிறப்பு, காடு, காளிகோயில் முதலிய பல்வகைச் சிறப்புக்களும் பல்வேறு சுவைகள் கொப்புளிக்கும் படி அமைக்கப் பெறும், இந்த வழக்கத்தை,

' கடவுள் வாழ்த்துக் கடைதிறப் புரைத்தல்
கடும்பாலை கூறல் கொடுங்காளி கோட்டம்
கடிகணம் உரைத்தல் காளிக் கதுசொலல்
அடுபேய்க் கவள்சொலல் அதனல் தலைவன்


  1. பன்னிருபாட்-சூத், 57