பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


சுவை பொருட்சுவைகளைக் கண்டு வியந்து ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு பொன் தேங்காயை உருட்டி அவரையும் அவரது நூலையும் சிறப்பித்ததாகவும் அவ்வரலாற்றால் அறிகின்றோம். இது எத்துணை உண்மையாயிருக்கும் என்பதை ஆராய்ந்த பின்னர்தான் ஒப்புக்கொள்ளவேண்டும்.

நூற் பொருள்

சயங்கொண்டார் தம் நூலில் குலோத்துங்கன் அவையில் வீற்றிருக்கும் சிறப்பு, அவன் நால் வகைச் சேனையுடன் புறப்பட்டுப் பயணம் செல்லும் இயல்பு, படைகள் போருக்கெழுந்த தன்மை, அவை போர் புரியும் பான்மை, போர்க்களக் காட்சி முதலிய செய்திகளை நூலைப் படிப்போர் அவற்றைத் தம் மனக்கண்முன் நிறுத்திக் கண்டு மகிழுமாறு அழகிய சொல்லோவியங்களால் காட்டுகின்றார். அவற்றை ஆங்காங்கு கண்டு மகிழ்க. நூலிலிருந்து அக்கால அரசர் இயல்புகள், அக்காலப் போர்முறை, அக்கால மக்கள் இயற்கை, அவர்களின் பழக்க வழக்கங்கள் போன்ற செய்திகளை நன்கு அறியலாம். இவற்றைப் பின்னர்க் காண்போம்.

நூல் அமைப்பு

நூலைத் தொடங்குமுன் பாட்டுடைத் தலைவனாகிய குலோத்துங்கன் நெடிது வாழுமாறு சிவபெருமான், திருமால், நான்முகன், ஞாயிறு, யானைமுகன், ஆறுமுகன், நாமகள், உமை, சப்தமாதர்கள் ஆகியவர்களை வணங்கி வாழ்த்துக் கூறுகின்றார் ஆசிரியர். அடுத்து 'கடைதிறப்பு' என்ற பகுதி வரு