பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"கடைதிறப்பின்" உட்பொருள்



' டைதிறப்பு ' என்பது பரணி என்னும் பிரபந்தத்தின் உறுப்புக்களுள் ஒன்று என்பதையும் இதுபற்றி இரண்டு கருத்துக்கள் நிலவுகின்றன என்பதையும் மேலே குறிப்பிட்டோம். அக் கருத்துக்களை இங்கு ஆராய்வோம்.

அவை :

ஒன்று : கலிங்கப் போருக்குச் சென்ற வீரர்களுடைய மனைவியர் தம் கணவரின் பிரிவால் கவன்றும் ஊடியும் தம் வாயிற் கதவுகளை அடைத்துக் கொண்டு வீட்டினுள்ளேயிருக்க, சயங்கொண்டார் அவர் வீட்டு முன்புறம் சென்று தாம் பாடும் கலிங்க வெற்றியைக் கேட்கக் கதவு திறக்குமாறு வேண்டுதல் எனபது.

மற்றொன்று : முதற் குலோத்துங்கன் அடைந்த கலிங்க வெற்றியைக் கொண்டாடும் விழாவுக்கு நகரத்துப் பல்வேறு மகளிரும் அதிகாலையில் எழுந்து ஒருவரை யொருவர் துயிலெழுப்புவது என்பது.

இந்த இரண்டிலும் முன்னது அமைவுடையதன்று. போருக்குச் சென்றிருந்த தம் கணவன்மார் திரும்பி வருவதற்குக் காலம் தாழ்த்தினமையால் அவர்தம் மனைவிமார் கதவுகளை அடைத்துக்