பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கடைதிறப்பின் உட்பொருள்

27


மெய்யே கொழுநர் பிழைநலிய
வேட்கை நலிய விடியளவும்
பொய்யே யுறங்கும் மடநல்லீர்!
புனைபொற் கபாடம் திறமினோ"[1]

[கொழுநர்-கணவர்: வேட்கை-(கலவி) ஆசை; நலியமனத்தை வாட்ட]

போக அமளிக் களிமயக்கில்
புலர்ந்த தறியா தேகொழுநர்
ஆக அமளி மிசைத்துயில்வீர்
அம்பொற் கபாடம் திறமினோ."[2]

[போகம்-கலவியின்பம்; அமளி-படுகை; புலர்ந்தது. விடிந்தது; அகம்-மார்பு]

வருவார் கொழுநர் எனத்திறந்தும்
வாரார் கொழுநர் எனவடைத்தும்
திருகும் குடுமி விடியளவும்
தேயும் கபாடம் திறமினோ."[3]

[திருகும்-சுழலும் ; குடுமி-வாயிலின் மேற்புறத் தமைந்த குழிவிடத்தோடு பொருத்தப்பெறும் கதவின் தலைப்பகுதி]

என்ற தாழிசைகளால் இதனை அறியலாம்.எல்லா மங்கலங்களும் தொடங்குவதற்கு ஏற்றதாகிய காலைப் பொழுதே பரணி விழாவின் தொடக்கத்திற்கும் உரியது என்பது மிகவும் பொருத்தமானதொன்று. கடைதிறப்புப் பகுதியிலுள்ள தாழிசைகளை ஊன்றிப் படித்தால் இங்ஙனம் துயிலெழுப்பியவர்கள், உயர் குல மகளிர், அரசனும் தலைவரும் விழைந்த மகளிர், சிறையாகவும் திறையாகவும் பெற்ற மகளிர், ஓதுதல் போன்ற காரணம் பற்றிக் கணவனைப் பிரிந்து


  1. தாழிசை-36
  2. தாழிசை-37
  3. தாழிசை-69