பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கடைதிறப்பின் உட்பொருள்

33


என்ற வெண்பாவில் மேற்கூறிய தாழிசையின் பொருள் அமைந்திருக்கின்றது. இம்மாதிரியாக கலவிப்போர் நிகழ்ச்சிகளை வருணிக்கும் பாடல்கள் இப்பகுதியில் பலவுள்ளன. அன்பர்கள் அவற்றினைப் படித்துச் சுவைப்பார்களாக.

புறத்தில் அகம்

இனி, புறப்பொருளாகிய போர், வெற்றி முதலியவற்றைப் பாடவந்தவிடத்து அகப்பொருள் சுவைகளைப் பாடியதன் கருத்துதான் என்ன என்று பார்ப்போம்.

நூலில் கடைதிறப்பை அடுத்து வரும் உறுப்புக்களுள் இராசபாரம்பரியம் 'அவதாரம்' என்ற இரண்டைத் தவிர ஏனையவைகள் குரூரமான அம்சங்களையே வருணித்துச் செல்லுகின்றன. பேயும் பிடாரியும், பிணமும் நினமும், இடுகாடும் சுடுகாடும், அறுபட்ட தலையும் மிதிபட்ட உடலும், செங்குருதி வெள்ளமும் சினமறவர் வீரமும், போர்க்களத்திலுள்ள பல்வேறு பயங்கர நிகழ்ச்சிகளும், கேட்டாரிடம் அச்சத்தை விளைவிக்கும் பேய்கள் கூழ் அட்டு உண்ணும் காட்சிகளும் காணக் கிடக்கின்றன. இவற்றிற்கு முன்னதாக துவரத் துறந்த ஞானியர் உள்ளத்தையும் ஈர்க்கவல்ல இன்பப் பாடல்களைத் தக்க முறையில் பொருத்திப் பாடினுல், வீரச்சுவையும் உவகைச் சுவையும் (சிருங்காரம்) சிறக்கும் என்றே கவிஞர் இவற்றிற்கு இடம் தந்திருக்க வேண்டும். அன்றியும், நிமிர்ந்த செல்வமும் நிறைந்த இளமையும் உள்ள வீரர்கள் தம் காதலியரைத் துறந்து போர்க்காதலில் ஈடுபட்