பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/4

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.சமர்ப்பணம்


தீந்தமிழ் அன்னைக்கு இனியநற் புதல்வன் ;
        செம்மையில் பிறழ்ந்திடா உளத்தன் ;
காந்திஎம் பெருமான் நெறிவழி நிற்போன் ;
        கல்சொலும் கதையுணர் அறிஞன் ;
சாந்தமார் முப்பால் வாசகம் சுவைப்போன் ;
        தண்டமிழ்க் கம்பனுக்கு அடியான் ;
மாந்தருள் சிறந்தோன் கணேசனும் எங்கள்
        வள்ளலுக்கு உரியதுஇந் நூலே.