உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி

டார்கள் என்றால், அவர்கள் வீரத்தை என்னென்று சொல்வது ? இது சிறந்த தியாகம் அல்லவா? இந்த நிலையைக் காட்டிய பிறகு அவர்களின் வீரத்தையும் காட்டினால் அவர்களுடைய மனப்பான்மையும் உடற்பான்மையும் எளிதில் புலனாகும் என்று எண்ணித்தான் போர் பாடும் நூலில் கலவிப் போர்க் குறிப்புக்களையும் கவிஞர் காட்டினர் என்று கருதுவதில் தவறு ஒன்றும் இல்லை.

இன்னொரு விதமாகவும் கருதலாம். எல்லாச் சுவைகளிலும் சிறந்தது சிருங்காரம் ; எல்லா உயிர்ப் பிராணிகளிடமும் பரம்பரை வாசனையாய் அமைந்து கிடப்பது; அவற்றின் இனப் பெருக்கத்துக்கும் பெருந்துணை புரிவது, ஆண்டவன் படைப்பில் அற்புதமாக அமைந்து கிடப்பது படைப்பின் பெருவிசையாக உள்ளதும் இதுவே. தவிர, தாவர உலகத்திலுள்ள ஒரு செய்தியை அறிந்தால் இதை இன்னும் நன்கு உணரலாம். தாவரங்களில் சிலவற்றின் இனப் பெருக்கத்திற்குத் துணை புரிபவை வண்டுகள். அவ்வண்டுகளைத் தம்பால் ஈர்ப்பதற்கு அவற்றின் மலர்கள் பல்வேறு வண்ணங்களுடனும், மணங்களுடனும் அமைந்துள்ளன ; அன்றியும், அவை வண்டுகளின் உணவாகிய தேனையும், மகரந்தங்களையும் கொண்டுள்ளன. தம் இனப் பெருக்கத்தின் உயிர்நாடியே வண்டுகளின் உணவாக அமைந்திருப்பது படைப்பின் விந்தை என்று கருத வேண்டும். படைப்பின் இந்த இரகசியத்தை அறிந்த கவிஞர்கள் சிறுமதியினரையும் இன்பச் சுவையால் ஈர்த்து விடலாம் என்று கருதியே தம் நூல்களில் அகப்பொருள் துறைகளையமைத்துப்