பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேய்கள் உலகம்


விதைகளைக் கணிவித்துக் கற்போரின் மனத்தை விரிந்த பார்வையில் செலுத்துவது கற்பனைத் திறன் ; கவிதையின் பிற பண்புகளுக்கெல்லாம் அடிநிலமாக அமைவது அதுதான் ; முடியாக இருப்பதும் அதுவே. உணர்ச்சிகளின் நிலைகளனாக எழுதப் பெறும் எல்லா வகையான இலக்கியங்களுக்குமே கற்பனையாற்றல் மிக மிக இன்றியமையாததாகும். கற்பனை என்றால் என்ன என்பதைச் சொற்களால் எல்லை கட்டிக் காட்ட இயலாது, ரஸ்கின் என்ற மேற்புலக் கவிஞர், " கற்பனையின் தத்துவம் அறிவுக்கு எட்டாதது ; சொற்களால் உணர்த்த முடியாதது ; அது அதன் பலன்களை மட்டிலும் கொண்டே அறியப்படுவ தொன்றாகும்"[1] என்று கூறியிருப்பது ஈண்டு சிந்தித்தற்குரியது. கவிஞன் யதார்த்த உலகில் நிகழும் சில நிகழ்ச்சிகளை வைத்துக்கொண்டே தன் கற்பனைத் திறனால் புதியதோர் உலகைப் படைத்துக் காட்டுகிறான். நாம் அவ்வுலகில் உலவும் பொழுது பெருமகிழ்ச்சி கொள்ளுகின்றோம் ; பேரின்பத்தில் திளைக்கின்-


  1. The essence of imaginative faculty is utterly mysterious and inexplicable, and to be recognised in its effects only.
    - Ruskin.