பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேய்கள் உலகம்

43


அவை புகையாலும் நீறாலும் மூடுண்ட தணலை ஒத்திருக்கும். மூங்கில்கள் முத்துக்களை உதிர்த்தல், அவை அந்நிலத்தின் வெம்மை கண்டு மனமுருகிச் சொரிகின்ற கண்ணீரை யொக்கும். அம் முத்துக்கள் நிலத்தில் கிடக்கும் தன்மை, பாலை நிலத்தின் உடலில் தோன்றிய வியர்வைத்துளிகளை அல்லது கொப்புளங்களை ஒத்திருக்கும்.

காளி கோயில்

இத்தகைய கொடிய காட்டில் தான் காளி தேவியின் கோவில் அமைந்திருக்கின்றது. குலோத்துங்கன் வென்று கொன்ற அரசர்களின் தேவிமார்களுடைய ஆபரணங்களிலுள்ள இரத்தினங்கள் கோவிலுக்கு அடித்தளமாக அமைந்திருக்கின்றன. சேனாவீரர்களின் கொழுப்பாகிய சேற்றை அவர்களின் உதிரமாகிய நீரால் குழைத்து அவர்கள் தலைகளைக் கொண்டு சுவர் எழுப்பப்பட்டுதுள்ளது. மாற்றரசர்களின் காவற்காடுகளிலுள்ள மரங்கள் தாம் தூண்களாகவும் உத்திரங்களாகவும் அமைந்துள்ளன, யானையின் கொம்புகள் அரிச்சந்திரக் கால்களாகவும், அவற்றின் விலா வெலும்புகள் கைமரங்களாகவும் பகை வேந்தர்களின் கொடிகள் மேல்முகட்டின் கூடல் வாய்களாகவும் பயன்படுத்தப் பெற்றுள்ளன. யானைகளின் முகபடாங்கள் கூரையாக அமைக்கப்பெற்றுள்ளன, கோவிலின் மதிற் சுவர்களும் கோபுரமும் எலும்புகளாலமைந்துள்ளன. கோவிலுக்கு முன்னால் இரண்டு இரும்புத் தூண்கள் நடப்பெற்று அவற்றின்மீது ஓர் இரும்பை வளைத்து மகர தோரணமாக அமைக்கப்